அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஸ்மார்ட் போன்கள்.. சட்டசபையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு
சென்னை: அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஸ்மார்ட் போன் அளிக்கப்படும் என சமூகநலத் துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 2023- 2024 -ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கடந்த மார்ச் 20 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. மார்ச் 21 ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடந்து வருகிறது.
நேற்றைய தினம் மாற்றுத் திறனாளிகள் மற்றும் சமூகநலத் துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் கீதா ஜீவன் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில் 25.70 கோடி ரூபாய் செலவீனத்தில் 17,312 அரசுப் பள்ளி சத்துணவு மையங்களுக்கு புதிய சமையல் உபகரணங்கள் வழங்கப்படும். சமூகநலத் துறையின் கீழ் செயல்படும் சத்துணவுத் திட்டம், உள்ளகப் புகார் குழுக்கள், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் ஆகியவற்றின் செயல்பாடுகளை துரிதப்படுத்தவும் கண்காணிக்கவும் ரூ 50 லட்சம் செலவீனத்தில் இணையதள முகப்பு மற்றும் கைப்பேசி செயலிகள் உருவாக்கப்படும்.
சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் நவீன உயர்ரக தையல் இயந்திரங்கள் வழங்கப்படும். முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் மறுசீரமைக்கப்படும். 6 வயதிற்குள்பட்ட குழந்தைகளின் வளர்ச்சியை கண்காணித்து நிகழ் நேர பதிவு மேற்கொள்ள ஏதுவாக 18,573 அங்கன்வாடி பணியாளர்களுக்கு 17.53 கோடி ரூபாய் செலவில் திறன் கைப்பேசிகள் வழங்கப்படும்.

அது போல் குழந்தைகளின் வளர்ச்சியைக் கண்காணிக்கும் வகையில் 18,573 குழந்தைகள் மையங்களுக்கு 14.85 கோடி ரூபாய் செலவீனத்தில் வளர்ச்சி கண்காணிப்பு கருவிகள் வழங்கப்படும். முன்னேற விழையும் மாவட்டங்களான ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் தேர்வு செய்யப்பட்ட 70 குழந்தைகள் மையங்களுக்கு கற்றல் திறன்களை ஊக்கப்படுத்த எல்இடி டிவி பெட்டிகள் வழங்கப்படும்.
அதாவது ஒரு குழந்தைகள் மையத்திற்கு ரூ 25 ஆயிரம் மதிப்பிலான டிவி பெட்டிகளை 700 மையங்களுக்கு ரூ 1.75 கோடி செலவில் வழங்கப்படும். திருச்சி, கோவை, சென்னையில் குழந்தைகளுக்கான போதை தடுப்பு மையங்கள் 1.14 கோடி ரூபாயில் அமைக்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications