அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 % இடஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக அரசு சாதனை.. அமைச்சர் கோ வி.செழியன்
சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பொறியியல், மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட அனைத்து தொழில்முறை படிப்புகளிலும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்தி முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு சாதனை படைத்துள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்ச கோ வி.செழியன் தெரிவித்துள்ளளார். கடந்த நான்கு கல்வியாண்டுகளில், இத்திட்டத்தின் கீழ் 1,165 கோடி ரூபாய்க்கு மேல் விடுவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 40,168 மாணவர்கள் பயனடைந்துள்ளனர் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் கோ வி.செழியன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாகதமிழக உயர்கல்வி துறை அமைச்சர் கோ வி.செழியன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "இந்தியாவிலேயே தமிழ்நாட்டை உயர்கல்வியில் முதன்மை மாநிலமாக உயர்த்தி பல்வேறு சாதனைகளைத் திராவிட மாடல் அரசு படைத்து வருகிறது.
திராவிட மாடல் அரசின் 'புதுமைப் பெண்' திட்டத்தின் மூலம் பெண்கள் உயர்கல்வி பயிலும் எண்ணிக்கை உயர்ந்துள்ளதை பல ஆய்வுகள் மெய்பித்துள்ளன. அதேபோல மாணவர்களுக்கான 'தமிழ் புதல்வன்' திட்டத்தை செயல்படுத்தி மாணவர்கள் தங்கள் உயர்கல்வி கனவை எந்த இடையூறும் இல்லாதவாறு சாதிக்க சாத்தியப்படுத்தியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

இத்திட்டங்களை போலவே அரசுப்பள்ளி மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளை உயர்த்தவேண்டும், உயர்கல்வி சேர்க்கையில் அவர்களுக்கான உரிய வாய்ப்புகள் கிடைக்கவேண்டும் எனும் நோக்கத்துடன் அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பொறியியல், மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட அனைத்து தொழில்முறை படிப்புகளிலும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை திராவிட மாடல் அரசு செயல்படுத்தும் என 20.9.2021 அன்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அரசாணை வெளியிடப்பட்டு அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த முன்முயற்சியின் கீழ், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணம், விடுதி மற்றும் போக்குவரத்துக் கட்டணம் உள்ளிட்ட மொத்த கல்விச் செலவினையும் அரசே ஏற்றுக்கொண்டுள்ளது.
கடந்த நான்கு கல்வியாண்டுகளில், இத்திட்டத்தின் கீழ் 1,165 கோடி ரூபாய்க்கு மேல் விடுவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 40,168 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். அரசுப்பள்ளி மாணவர்கள் உயர்கல்வி பயில்வதில் எத்தகைய இடையூறையும் எதிர் கொண்டு விடக்கூடாது எனும் முதல்வர் ஸ்டாலினின் அக்கறை உள்ள நடவடிக்கையினால் இந்த சாதனை நிகழ்ந்திருக்கிறது.
குறிப்பாக தொழிற்படிப்புகளில் 35,530 பேர், மருத்துவம் சார்ந்த படிப்புகளில் 2,382 பேர், வேளாண் படிப்புகளில் 1,369 பேர், கால்நடை மற்றும் மீன்வளம் சார்ந்த படிப்புகளில் 261 பேர், சட்டப் படிப்புகளில் 626 பேர் என மொத்தம் 40,168 அரசுப்பள்ளி மாணவர்கள் கடந்த நான்காண்டுகளில் இந்த இட ஒதுக்கீட்டினால் பயனடைந்துள்ளார்கள்.
எல்லோருக்கும் எல்லாம் எனும் சமூக நீதிக் கண்ணோட்டத்தை அரசியல் இலட்சியமாக கொண்டு செயலாற்றி வரும் திராவிட மாடல் அரசு அனைவருக்கும் வாய்ப்புகள் பாகுபாடின்றி கிடைக்க வேண்டும் என்பதில் எப்போதும் உறுதியாக இருக்கின்றது.
தமிழ்நாட்டு மாணவச் செல்வங்களை பொருத்தவரை அவர்களுக்கு தந்தையாக இருந்து அவர்களுக்கான திட்டங்களை உள்ளார்ந்த அன்போடும் அக்கறையோடும் முதல்வர் ஸ்டாலின் நடைமுறைப்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டின் தெருக்களில் முதல்வர் ஸ்டாலினை நடக்கும் தருணமெல்லாம் அவரை அப்பா! அப்பா! என உள்ளன்போடு தமிழ்நாட்டின் மாணவச் செல்வங்கள் அழைத்து மகிழ்வது இதுபோன்ற போன்ற சாதனைகளால்தான்." இவ்வாறு அமைச்சர் கோ வி.செழியன் கூறியுள்ளார்.
-
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம்












Click it and Unblock the Notifications