சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பரட்டை பற்ற வைத்ததால் எரிந்து கொண்டிருக்கிறது.. ரஜினி குறித்து அமைச்சர் ஜெயக்குமார்

Google Oneindia Tamil News

சென்னை: பரட்டை பற்ற வைத்ததால் எரிந்து கொண்டிருக்கிறது என ரஜினிகாந்த் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் சென்னை பட்டினப்பாக்கத்தில் அளித்த பேட்டியில் பரட்டை பற்ற வைத்தது எரிந்து கொண்டிருக்கிறது. துக்ளக் விழாவில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை ரஜினி தவிர்த்திருக்கலாம்.

மக்கள் விரும்பாத ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம். ஹைட்ரோகார்பன் திட்டத்தில் மக்களை திசைத் திருப்ப முயல்கிறார் ஸ்டாலின். மாநில அரசின் அனுமதியின்றி ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த முடியாது.

Recommended Video

    துக்ளக் விழாவில் ரஜினி சொன்ன பால்காரர் கதை!

     தந்தை பெரியார் குறித்து அவதூறு: ஜன.22, 23-ல் ரஜினிகாந்த் வீடு முற்றுகை- திவிக, தபெதிக தந்தை பெரியார் குறித்து அவதூறு: ஜன.22, 23-ல் ரஜினிகாந்த் வீடு முற்றுகை- திவிக, தபெதிக

    அறிவாளி

    அறிவாளி

    துக்ளக் பொன் விழா ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அப்போது அவர் முரசொலி வைத்திருந்தால் அவர் திமுககாரன் என்றும் துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்றும் கூறி விமர்சனத்திற்குள்ளானார்.

    தவிர்த்திருக்கலாம்

    தவிர்த்திருக்கலாம்

    இதை திமுக கடுமையாக விமர்சித்தது. இதன் கூட்டணி கட்சிகளும் துக்ளக் விழாவில் ரஜினி அதுகுறித்து மட்டும் பேசியிருக்கலாம். மற்றவற்றை தவிர்த்திருக்கலாம் என்றனர்.

    பேரணி

    பேரணி

    இது மட்டுமல்லாது பெரியார் சேலத்தில் நடத்திய பேரணி குறித்து ரஜினி அவதூறு தகவலை அளித்ததாக கூறப்படுகிறது. இதை கண்டித்து தமிழகத்தில் ஆங்காங்கே திராவிடர் கழகத்தினர் ரஜினிக்கு எதிராக வழக்கு பதிந்து வருகின்றனர்.

    சுற்றுச்சூழல்

    சுற்றுச்சூழல்

    இனி ஹைட்ரோகார்பன் இருக்கிறதா என ஆய்வு மேற்கொள்ள கிணறு அமைப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதியும் அப்பகுதி மக்களின் கருத்து கேட்பும் தேவையில்லை என மத்திய அரசு புதிய அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    English summary
    Minister Jayakumar says that Rajini would have avoid controversial speech about Periyar in Tuglaq function.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X