தேர்தல் ஆணையத்துக்கே தேர்தல் நடத்திடலாமா.. அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்
சென்னை: தேர்தல் ஆணையத்துக்கும் தேர்தல் வைக்க வேண்டும் போல் உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலாக கூறினார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள டுமீல் குப்பம் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் அந்த பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் எரிந்து நாசமாயின. இந்நிலையில் பாதிக்கப்பட்ட அந்தப் பகுதியை அமைச்சர் ஜெயக்குமார் பார்வையிட்டார் மக்களுக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மாற்று ஏற்பாடுகளை அரசு உடனடியாக செய்து கொடுக்கும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் இருப்பதால் நிவாரணப் பொருட்கள் வழங்குவது குறித்து ஆலோசனைகள் மேற்கொண்டு வழங்கப்படும்.

தேர்தல் வைக்க வேண்டும்
இந்தியத் தேர்தல் ஆணையத்திற்குள் நடைபெறும் விஷயங்களுக்குள் அரசியல் கட்சிகள் தலையிட முடியாது. ஆனால் காமெடியாக சொல்ல வேண்டும் என்றால் தேர்தல் ஆணையத்திற்கும் தேர்தல் வைக்க வேண்டும் போல் உள்ளது.

சரியான ஒன்றல்ல
அரசியல் கட்சித் தலைவர்கள் மக்களை நம்பி இருக்க வேண்டும். மதங்களை நம்பி இருக்கக் கூடாது. மக்களுக்கு தேவையான விஷயங்களை சொல்லாமல் மதத்தை வைத்து அரசியல் செய்வது சரியான ஒன்றல்ல.

ஆசை
திமுக தலைவர் ஸ்டாலின் பதவி மேனியாவில் உள்ளார். டிடிவி தினகரன் பதவி மேனியா மற்றும் பணம் மேனியா மீது ஆசையாக உள்ளார். கமல் வரலாற்றாசிரியர் போல் பேசி வருகிறார்.

பருவமழை
தமிழகத்தில் பருவமழை பொய்த்ததன் காரணமாகவே ஆங்காங்கே குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. எனினும் அரசு இதனை முன்கூட்டியே கணக்கிலிட்டு குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு தேவையான சாதுரியமான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

சமாளிப்பதற்கு
சென்னையை பொருத்தவரை குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கிறது. இந்த கோடையை சமாளிப்பதற்கான அத்தனை நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும் என்றார் ஜெயக்குமார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications