ரஜினி திரைப்படத்தில் வேணா ஹீரோவாக இருக்கலாம்... ஆனால்... அமைச்சர் ஜெயக்குமார் பொளேர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினி திரைப்படத்தில் வேண்டுமானால் ஹீரோவாக இருக்கலாம். ஆனால் அரசியலில் அவர் ஹீரோவா இல்லை ஜீரோவா என்பதை மக்கள்தான்முடிவு செய்வர் என அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஜனாபதியிடம் மத்திய தமிழக அரசின் தீர்மானத்தை உள்துறை அமைச்சகம் அனுப்பாதது குறித்து கேள்வி எழுப்பினர்.

[பதவிக்கு தக்கபடி பேசுங்கள்.. நான் திருப்பி கேட்டால் என்ன ஆகும்.. அமைச்சர் மீது சீறிய ரஜினிகாந்த்]

விளக்கம்

விளக்கம்

அதற்கு ரஜினிகாந்த் எந்த 7 பேர் என கேட்டு ஒரு சர்ச்சையில் சிக்கினார். இந்நிலையில் இன்று அதற்கு ஒரு விளக்கமும் அளித்தார்.

ஹீரோவா இல்லை ஜீரோவா

ஹீரோவா இல்லை ஜீரோவா

இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறுகையில் ரஜினி திரையுலகில் ஹீரோவாக இருக்கலாம். ஆனால் அவர் அரசியலில் ஜீரோவ என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள்.

இன்று ஒன்று நாளை ஒன்று

இன்று ஒன்று நாளை ஒன்று

திரைப்படத்தால் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படக் கூடாது. பாஜக பலமான கட்சியா என கேட்கிறீர்கள். அதற்கு சான்றிதழ் தர நான் சென்சார் போர்டு இல்லை. ரஜினி இன்னைக்கு ஒன்று பேசுவார், நாளை ஒன்று பேசுவார்.

காயப்படுத்தினால்

காயப்படுத்தினால்

விமர்சனங்கள் ஆரோக்கியமாக இருக்கலாம். ஆனால் திட்டமிட்டு ஒரு தலைவரை காயப்படுத்தினால் ஏற்றுக் கொள்ள முடியாது என ஜெயக்குமார் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+