சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பதவிக்கு தக்கபடி பேசுங்கள்.. நான் திருப்பி கேட்டால் என்ன ஆகும்.. அமைச்சர் மீது சீறிய ரஜினிகாந்த்

Google Oneindia Tamil News

Recommended Video

    7 தமிழர், பாஜக, 2.0 பற்றிய சர்ச்சைக்கு அதிரடி விளக்கம்!-வீடியோ

    சென்னை: பதவிக்கு தக்கபடி மரியாதையோடு பேச வேண்டும் என்று, அமைச்சர் ஜெயக்குமாருக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்தார்.

    சென்னை, போயஸ் இல்லத்தில் இன்று நிருபர்களை சந்தித்தார் ரஜினிகாந்த். அப்போது, அவர் 7 தமிழர் விடுதலை மற்றும் பாஜக குறித்த தனது நிலைப்பாட்டை எடுத்துரைத்தார்.

    நேற்று தனது பிரஸ் மீட்டால் சர்ச்சை எழுந்த நிலையில், இதற்கு விளக்கம் அளிக்கவே, இன்று பத்திரிகையாளர் சந்திப்பை நிகழ்த்தினார் ரஜினிகாந்த்.

    [இன்னும் முழுசா அரசியல்ல ஈடுபடல.. எல்லாம் வீட்டுக்கு போங்க.. மறுபடியும் முதல்ல இருந்தா ரஜினி?]

    ஜெயலலிதா இல்லாததால்

    ஜெயலலிதா இல்லாததால்

    அப்போது, பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவரிடம், ஜெயலலிதா இல்லாததால், நடிகர்களுக்கு குளிர்விட்டு போய்விட்டது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளாரே என்று நிருபர்கள் கேட்டனர். இந்த கேள்வியை கேட்டதும், ரஜினிகாந்த் உள்ளுக்குள் கோபமடைந்துவிட்டார். கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த், ஜெயக்குமாரை சாடினார்.

    புண்படுத்த கூடாது

    புண்படுத்த கூடாது

    ரஜினி கூறியதாவது: அவர் நல்ல பதவியில் உள்ளார். பேசும்போது யாரையும் புண்படுத்தாமல் கருத்தை சொன்னால் நல்லது. அதே கருத்தை நான் கேட்டால்.. ஜெயலலிதா இருக்கும்போது என்று பதிலுக்கு நானும் கேட்டால்.. பதவிக்கு மரியதை கொடுத்து பேசினால் நல்லது. இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்தார்.

    சர்கார் விவகாரம்

    சர்கார் விவகாரம்

    சர்கார் திரைப்படம் மறு தணிக்கை செய்யப்பட கூடாது என்று கருத்து கூறினீர்கள். ஆனால் அதிமுகவினர் போராட்டத்தால், சர்கார் படம் மறு தணிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    வன்மையாக கண்டிக்கிறேன்

    வன்மையாக கண்டிக்கிறேன்

    இதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், சர்கார் மறுதணிக்கை செய்யப்படும் அளவுக்கு சென்றதை, கடுமையாக கண்டிக்கிறேன். அது வன்முறை. எந்த ரூபத்தில் வந்தாலும், வன்முறையை ஏற்க முடியாது என்றார்.

    சர்க்கார் பார்க்கும்

    சர்க்கார் பார்க்கும்

    2.O திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என வாட்டாள் நாகராஜ் போன்றோர் அறிவித்துள்ளார்களே என்ற கேள்விக்கு, அதை கர்நாடகா சர்க்கார் பார்த்துக்கும் என்று பதிலளித்து பிரஸ் மீட்டை முடித்துக்கொண்டார் ரஜினிகாந்த்.

    English summary
    Actor Rajinikanth slam, minister Jayakumar over his comment on actors.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X