கோடிக்கணக்கில் ஊழல்.. சிக்கிய செந்தில் பாலாஜி! சிக்கப் போகும் கேஎன் நேரு! தவெக அருண்ராஜ் காட்டம்!
சென்னை: தமிழக நகராட்சி நிர்வாக துறையில் பணியிடங்களை நிரப்புவதில் முறைகேடு நடந்திருப்பதாக ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு காவல்துறைக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது. இந்த நிலையில் செந்தில் பாலாஜி வழியில் அமைச்சர் கேஎன் நேருவும் சிக்கப் போகிறார் என கூறி இருக்கிறார் தமிழக வெற்றிக்கழகத்தின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளரும், முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரியுமான அருண் ராஜ்.
கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தின் பல்வேறு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த வகையில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கேஎன் நேருவின் சகோதரரான ரவிச்சந்திரனுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்றது.
குறிப்பாக ட்ரூ வேல்யூ ஹோம் என்ற நிறுவனத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள நகராட்சிகளில் 2538 பணியிடங்களை நிரப்புவதில் முறைகேடு நடந்திருப்பதாகவும், அதில் 150 பேர் 25 முதல் 35 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் கொடுத்து பணியில் சேர்ந்ததாக அமலாக்கத்துறை கூறியுள்ளது.

நகராட்சி நிர்வாகத் துறை
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் காவல்துறைக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது. இந்த நிலையில் செந்தில் பாலாஜி வழியில் அமைச்சர் கேஎன் நேருவும் சிக்கப் போகிறார் எனவும், இளைஞர்களின் வாழ்வோடு திமுக அரசு விளையாடுவதாக விமர்சித்துள்ளார் தமிழக வெற்றிக்கழகத்தின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண் ராஜ்.
அமலாக்கத்துறை
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனர், ஓட்டுனர் உள்ளிட்டப் பணியிடங்களுக்கு தேர்வு எழுதி தகுதியானவர்கள் பலர் இருந்தாலும், லஞ்சம் கொடுத்தவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு அளித்ததால் தகுதி வாய்ந்த பல்வேறு இளைஞர்களின் வாழ்க்கையே கேள்விக்குறியானது. இது குறித்த வழக்கு முன்னாள் அமைச்சர் திரு செந்தில்பாலாஜி
மீது நடந்து கொண்டிருக்கும் நிலையில், தகுதி வாய்ந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை மறுத்து, பணம் கொடுத்தவர்களுக்கே வேலை என்ற லஞ்ச வேட்டை, முதல்வர் திரு ஸ்டாலின் தலைமையிலான 'தகிடு தத்த மாடல்' அரசின் இன்னொரு முக்கிய துறையிலும் அரங்கேறி இருக்கிறது.
அமைச்சர் கே.என். நேரு
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2,538 பணியிடங்களுக்கு முதலமைச்சர் திரு ஸ்டாலின் கையால் பணி ஆணைகள் வழங்கப்பட்ட நிலையில், இதில் சுமார் 150 பணியிடங்களுக்கு 25 லட்சம் முதல் 35 லட்சம் வரை லஞ்சம் வசூலிக்க பட்டதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்துமாறு அமலாக்கத்துறை தமிழ்நாடு காவல்துறைக்கு கடிதம் எழுதி உள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் அமைச்சர் நேருவின் தம்பி ரவிச்சந்திரன் தொடர்பான இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது இது தொடர்பான ஆவணங்கள் கிடைத்தாகவும் கூறியுள்ளது அமலாக்கத் துறை.
செந்தில் பாலாஜி
ஏற்கனவே தகுதி வாய்ந்த இளைஞர்களின் வாழ்வாதாரத்தை பறித்த செந்தில்பாலாஜியை உச்சி முகர்ந்து மெச்சிக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின்... இப்போது அதே வழியில் தகுதி வாய்ந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாமல் லஞ்சம் கொடுத்தவர்களுக்கே வேலை என்று செயல்பட்டிருக்கிற திரு
நேரு அவர்களையும் உச்சி முகர்வாரா?
முக ஸ்டாலின்
ஸ்டாலினின் ஊழல் மாடல் அரசு அமலாக்கத் துறையின் கடிதத்துக்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? மாநில உரிமை என்ற உருட்டுகளை விரித்து தன் ஊழலை மூடி மறைப்பாரா? அல்லது தைரியமாக வழக்குப் பதிவு செய்து விசாரிப்பாரா?தமிழக காவல்துறை இவ்வழக்கில் எப்போது FIR பதிவு செய்வார்கள்? அவ்வாறு பதிவு செய்தாலும் தகுந்த குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்படுமா? தமிழக மக்கள் விழிப்போடு கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications