தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனது! நலமுடன் வீடு திரும்பிய அமைச்சர் கேகே.எஸ்எஸ்.ஆர். ராமச்சந்திரன்!
சென்னை: நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் நலமுடன் வீடு திரும்பியுள்ளார்.
மருத்துவர்கள் அறுவுரைப்படி இன்னும் ஓரு வாரமாவது அவர் ஓய்வில் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனின் மருமகன் பிரபல மருத்துவர் என்பதால் அவரது சிகிச்சை விவகாரத்தை அவரே கவனித்துக் கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சருக்கு நெஞ்சுவலி
தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சராக இருப்பவர் கேகே.எஸ்எஸ்.ஆர். ராமச்சந்திரன். இவருக்கு நேற்று முன் தினம் இரவு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கிறது. மேலும், உடல் அசவுகரியமாக இருந்ததால் உடனடியாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அமைச்சர் கேகே.எஸ்எஸ்.ஆர். ராமச்சந்திரன் அங்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்கள் குழு
இதையடுத்து இதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதா என்பன உள்ளிட்ட பல்வேறு சோதனைகளை மருத்துவர்கள் குழு மேற்கொண்டது. மேலும், அமைச்சர் கேகே.எஸ்எஸ்.ஆர். ராமச்சந்திரனின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. இதனிடையே அமைச்சரின் உடல்நிலை சீரானதை அடுத்து நேற்று மாலையே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் தங்கியிருக்கும் அவர் இன்னும் ஒரு வாரகாலம் ஓய்வில் இருப்பார் எனத் தெரிகிறது.

விருதுநகர் மாவட்ட திமுக
இதனிடையே அமைச்சர் கேகே.எஸ்எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு நெஞ்சு வலி எனத் தகவல் அறிந்ததும் விருதுநகர் மாவட்ட திமுக நிர்வாகிகள் பலரும் பதறிப்போய் சென்னைக்கு வருகை தருவதாக கூறியிருக்கிறார்கள். ஆனால் அமைச்சர் தரப்பிலிருந்து அப்படியெல்லாம் யாரும் வரவேண்டாம், அமைச்சருக்கு ஒன்றுமில்லை சிறிய பரிசோதனை தான் எனக் கூறி அவர்களை தடுத்து நிறுத்தப்பட்டார்கள். இதற்கு காரணம் மருத்துவர்கள் அறிவுரைப்படி அமைச்சருக்கு ஓய்வு தேவைப்படுவதே ஆகும்.

முதல்வர் நலம் விசாரிப்பு
அமைச்சர் கேகே.எஸ்எஸ்.ஆர். ராமச்சந்திரனை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், உடல்நலம் பற்றி விசாரித்ததோடு ஓய்வெடுத்துக் கொள்ளுமாறு கூறியிருக்கிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications