இதுவரை ஏற்பட்ட பாதிப்பு என்ன? நஷ்டஈடு எப்போது கிடைக்கும்? அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் புது தகவல்..!
சென்னை: கடந்த 4 நாட்களாக தமிழகம் முழுவதும் பெய்து வரும் கனமழையால் 1,146 குடிசைகள் சேதமடைந்துள்ளதாகவும் 14 பேர் இதுவரை உயிரிழந்திருப்பதாகவும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும், 157 கால்நடைகள் உயிரிழந்த தகவலையும் 149 மரங்கள் சாய்ந்து விழுந்த தகவலையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இதுமட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் இதுவரை 237 வீடுகள் மழையால் சேதமடைந்திருப்பதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியுள்

நஷ்ட ஈடு
சென்னை எழிலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மைத்துறை கண்காணிப்பு அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்த தகவலை வெளியிட்டார். மேலும், ஓரிரு நாட்களில் மழைவெள்ளப் பாதிப்புகளால் ஏற்பட்ட சேத மதிப்பு முழுமையாக தெரியவரும் என்றும் அதன்பிறகு உரியவர்களுக்கு எவ்வித தாமதமும் இன்றி நஷ்ட ஈடு வழங்கப்படும் எனவும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்திருக்கிறார்.

வெளியே வராதீர்
சென்னைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை கரையை கடக்க இருப்பதால், பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என மீண்டும் ஒரு முறை கேட்டுக்கொண்டார். குறிப்பாக காற்று 50 கி.மீ. வேகம் வரை வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் டூவிலர்களில் செல்வதை தவிர்க்க வேண்டும் என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பயிர்சேதம்
பயிர்சேத விவரங்களை கணக்கெடுக்க மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருப்பதால் விவசாயிகள் கலக்கம் அடையத் தேவையில்லை என்ற நம்பிக்கையையும் அமைச்சர் அளித்திருக்கிறார். டெல்டா மாவட்டங்களில் மட்டும் ஒன்றரை லட்சம் ஏக்கர் நெற்பயிர்களும், வேறு பயிர்களும் சேதமடைந்திருக்கக் கூடும் என உத்தேசமாக கணக்கிடப்பட்டுள்ளதாக கூறினார்.

காற்று வீசும்
இதுவரை மழை மட்டுமே பெய்துகொண்டிருந்ததால் பெரிய பிரச்சனை இல்லை என்றும் இன்று காற்றும் சேர்ந்து வீசவுள்ளதால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இதனிடையே இன்று காலை 5.30 மணிக்கெல்லாம் எழிலகம் அலுவலகத்திற்கு தாம் வந்துவிட்டதாகவும், இரவு நடந்த டெவலப்மெண்ட்களை அறிந்த பின்னர் தான் காலை தேநீரே குடித்ததாகவும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications