கமிஷனரை விட்ராதீங்கய்யா.. இன்னும் ஒரு வருஷம் தான்.. பேச்சை பாதியில் நிறுத்திய அமைச்சர் கே.என்.நேரு!
சென்னை: சென்னை அண்ணாநகரில் நடைபெற்ற அரசு விழா ஒன்றில், மாநகராட்சி ஆணையரை படம் பிடிக்காமல் விட்ராதீங்கய்யா என அங்கிருந்த ஒளிப்பதிவாளர்களிடம் அமைச்சர் நேரு கலாய்த்திருக்கிறார்.
இன்னும் ஒரு வருஷம் தான்.. என்று எதையோ சொல்ல வந்த அவர் திடீரென சுதாரித்துக் கொண்டு மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி பற்றி பேச வந்ததை அப்படியே நிறுத்திக்கொண்டார்.
அமைச்சர் நேரு கூற வந்ததை வைத்துப் பார்த்தால் இன்னும் ஓராண்டில் ககன் தீப் சிங் பேடி வேறொரு முக்கியப் பதவியில் அமர வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய சென்னை
மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அண்ணா நகரில் தயாநிதி மாறன் எம்.பி. நிதியிலிருந்து புதிய சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டுள்ளது. இதற்கான திறப்பு விழா நேற்று நடைபெற்ற நிலையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்ரமணியன், தயாநிதி மாறன் எம்.பி., மேயர் ப்ரியா ராஜன் மற்றும் மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

புகைப்படம்
அப்போது புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த போது மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி ஓரமாக நின்று கொண்டிருப்பதை கவனித்த அமைச்சர் நேரு, தனக்கே உரிய பாணியில், ''கமிஷனரை விட்ராதீங்கய்யா.. அவர் தான் முக்கியம்.. இன்னும் ஒரு வருஷம் தான்..'' என்று கூறியபடி தனது பேச்சை அப்படியே நிறுத்திக் கொண்டார். எதையோ சொல்ல வந்து பிறகு அதை சொல்லக் கூடாது என அமைச்சர் நேரு மறைத்தது இதிலிருந்து தெரிய வருகிறது.

முக்கியப் பதவி
சென்னை மாநகராட்சியில் திறம்பட பணியாற்றி வரும் ககன் தீப் சிங் பேடி, இன்னும் ஓராண்டில் கோட்டையில் முக்கியப் பதவியில் அமர வைக்கப்படலாம் என்பதை தான் அமைச்சர் நேரு இவ்வாறு சூசகமாக கூறினாரா என விவாதம் எழுந்திருக்கிறது. எதையும் மனதில் வைக்காமல் ஒளிவுமறைவின்றி பேசக்கூடியவர் அமைச்சர் நேரு என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தாம் இருக்கும் இடத்தை எப்போதும் கலகலப்பாகவும் அவர் வைத்துக்கொள்வார்.

முதல்வர் பாராட்டு
சென்னை மாநகராட்சி ஆணையராக உள்ள ககன் தீப் சிங் பேடி, தனது சுறுசுறுப்பான பணிகளால் முதலமைச்சர் ஸ்டாலினின் நன்மதிப்பை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இனி வரும் நாட்களில் அவருக்கான புரோமோஷன்கள் வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications