சார் நில்லுங்க! சண்டே லாக்வுடன் அதுவுமா, எங்க போறீங்க?.. வாகன தணிக்கையில் அமைச்சர் மா.சு. கெடுபிடி
சென்னை: தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் மா சுப்பிரமணியன் உள்ளிட்டோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா கேஸ்கள் அதிகரித்துக் கொண்டே செல்வதால் இன்று முழு லாக்டவுன் அமலாகியுள்ளது. மருத்துவம், காவல் துறை, பத்திரிகை உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.
இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை லாக்டவுனை கண்காணிக்க சென்னையில் மட்டும் 10 ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளார்கள். நேற்று இரவு 10 மணிக்கு தொடங்கிய லாக்டவுன் 31 மணி நேரம் நீண்டு நாளை காலை 5 மணியுடன் முடிவடைகிறது.

அத்தியாவசிய பணிகள்
இந்த நிலையில் இன்று முழு லாக்டவுன் என்பதால் காய்கறிகள், மளிகைக் கடைகள், இறைச்சிக் கடைகள், டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன. அது போல் பொது போக்குவரத்துக்கும் அனுமதி இல்லை. இன்று அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள் மட்டும் வெளியே வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

போலீஸார் குவிப்பு
அந்த வகையில் சென்னையில் போலீஸார் நூற்றுக்கணக்கான சோதனை சாவடிகளை அமைத்து அவ்வழியாக வருவோரிடம் எதற்காக, எங்கே செல்கிறீர்கள் என கேள்வி எழுப்பி, அதற்குரிய அடையாள அட்டைகளை காண்பிக்குமாறு போலீஸார் கூறி வருகிறார்கள்.

மாஸ்க் முறையாக அணியாதவர்கள்
அது போல் யாராவது மாஸ்க்கை முறையாக அணியாமல் இருந்தாலும் அவர்களை முறையாக மாஸ்க் அணியுமாறு அறிவுறுத்தி அனுப்புகிறார்கள். அந்த வகையில் வேப்பேரியில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் மாஸ்கை சரியாக அணியாததால் அவரை அழைத்து போலீஸார் எச்சரித்தனர். அப்போது அவர் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு " லாக்டவுனில் 200 ரூபாய் சம்பாதிப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா சார்" என கேள்வி எழுப்பினார்.

மா சுப்பிரமணியன் ஆய்வு
இந்த நிலையில் சைதாப்பேட்டையில் அமைச்சர் மா சுப்பிரமணியன், தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ஜே ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது மாஸ்க் அணியும் அவசியத்தையும் கொரோனா தடுப்பூசி போடுவது குறித்தும் அறிவுறுத்தினர். மேலும் தேவையில்லாமல் வெளியே சுற்ற வேண்டாம் என்றும் அறிவுரை வழங்கினர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications