சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனை புதிய தலைமை செயலகமாக மாறுகிறதா.. அமைச்சர் மா.சு. பதில்
சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தலைமைச் செயலகமாக மாறுகிறதா என்ற கேள்விக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை அண்ணாசாலை வாலாஜா சாலை சந்திப்பில் ஓமந்தூரார் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இது திமுக ஆட்சிக் காலத்தில் புதிய தலைமைச் செயலகத்துக்காக கட்டப்பட்டது.

இது 9.30 லட்சம் சதுர அடி பரப்பளவாகும். ஆனால் 2011 இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதிமுக ஆட்சி ஏற்பட்டவுடன் தலைமைச் செயலகம் பழையபடி புனித ஜார்ஜ் கோட்டையிலேயே செயல்படும் என்றும் புதிய கட்டடம் மருத்துவமனையாக செயல்படும் என்றும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அந்த கட்டடம் ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இங்கு புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கு சிறப்பாக வைத்தியம் பார்க்கப்படுகிறது. இங்கு உள்நோயாளியாக நிறைய பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மற்ற அரசு மருத்துவமனையை காட்டிலும் இட வசதி அதிகமாக இருக்கிறது.
அது போல் தரமான சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. தொடர்ந்து 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியிலிருந்த நிலையில் தற்போது 2021 இல் நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தது. அப்போது முதலே புதிய தலைமைச் செயலகக் கட்டடம் என்னவாகும் என்ற விவாதங்கள் நடந்தன. ஓமந்தூரார் மருத்துவமனை கிண்டிக்கு மாற்றப்பட்டு அந்த கட்டடத்தில் தலைமைச் செயலகம் அமையும் என சொல்லப்பட்டது.
இது குறித்து தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறுகையில் இந்த கட்டடம் தலைமைச் செயலகத்துக்காகக் கட்டப்பட்ட கட்டடம். கடந்த ஆட்சியில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மருத்துவமனையாக மாற்றினார்கள். தமிழக முதல்வர் ஸ்டாலின் பரந்த உள்ளத்தோடு, மருத்துவமனையான பிறகு அது மருத்துவமனையாகவே தொடரட்டும் என கூறினார்.

புதிய பல்வேறு பன்னோக்கு சிகிச்சைகளை இங்கு தொடங்கவும் உத்தரவிட்டு அதை தொடங்கியும் வைத்துள்ளார். 34 கோடி ரூபாய் மதிப்பிலான புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் ரோபாட்டிக் கருவி ஒன்றை இந்த மருத்துவமனையில் தொடங்கி வைத்தார். இந்த கருவி இந்தியாவில் வேறு எந்த மருத்துவமனையிலும் இல்லை.
இந்த கட்டடத்தில் காலியாக உள்ள இடங்களை பயன்படுத்த தொடங்கவுள்ளோம். முன்பெல்லாம் 400 பேர் அளவுக்குத்தான் சிகிச்சைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். தற்போது 1000 பேர் வரை வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த மருத்துவமனையில் இன்னும் கட்டமைப்பை உயர்த்துவோம் என மா.சுப்பிரமணியன் கூறியிருந்தார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications