பால் உற்பத்தியாளர்களுக்கு 10 நாட்களுக்குள் பணப்பட்டுவாடா! பாலை ஆவினுக்கு கொடுங்க! -மனோ தங்கராஜ்
சென்னை: விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு 10 நாட்களுக்குள் பண பட்டுவாடா செய்யப்பட்டு விடுவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் பாலை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்திற்கு வழங்கி பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியிருப்பதாவது;

பால் லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் பால் உற்பத்தியாளர்கள் நீண்ட நாள் கோரிக்கையை முதலமைச்சர் நிறைவேற்றி வைத்துள்ளார்.எனவே பால் உற்பத்தியாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பாலை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்திற்கு வழங்கி பயன்பெற வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
ஒவ்வொரு கிராமங்களிலும் உள்ள தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யும் பாலை ஆவினுக்கு வழங்கி வருகிறார்கள். அதன் மூலம் சங்கங்கள் ஈட்டுகின்ற லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீத தொகையை உறுப்பினராக உள்ள உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகையாக வழங்கி வருகிறோம்.
மேலும் சங்கங்கள் ஈட்டுகின்ற லாபத்தில் நிருவாக செலவினங்களை தவிர்த்து 50 சதவீதம் போனஸ் ஆக திரும்ப பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இது போன்று மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்கள் ஈட்டுகின்ற லாபத்தின் ஒரு பகுதியை தொடக்க கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகையாக வழங்கி வருகிறோம்.
மேலும் இதுவரையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் கறவை மாட்டுக் கடன் முன்பு 14%-15 % வட்டியில் வழங்கப்படடு வந்தது. ஆனால் தற்பொழுது பால்வளத் துறையின் முயற்சியால் 9% ஆக குறைக்கப்பட்டுள்ளது. தொடக்க வேளாண்மை சங்கங்களின் வாயிலாக கறவை மாட்டுக்கு பராமரிப்புக் கடன் வட்டி இல்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஓரிரு மாதங்களில் மட்டும் சுமார் 105 கோடிக்கு மேல் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. மாடுகளுக்கான காப்பீடு மற்றும் பால் உற்பத்தியாளர்களுக்கான காப்பீடு போன்றவை மறுசீரமைக்கப்பட்டு விவசாயிகள் நலனிற்கேற்ப வழங்கப்பட உள்ளது.
சந்தை விலையை ஒப்பிடும் பொது குறைந்த விலையில் தரமான மாட்டுத் தீவனம் ஆவின் நிறுவனம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் தரும் பாலுக்கு அந்த இடத்திலேயே தரப்பரிசோதனை செய்து விலை நிர்ணயிக்கப்படும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு விவசாயிகள் தரும் பாலுக்கு தரத்திற்கு ஏற்ற விலை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.இதனால் விவசாயிகளுக்கு ஏற்கெனவே வழங்கிய தொகையை விட கூடுதலாக ரூ.2 முதல் ரூ.4 வரை கிடைக்கிறது. மேலும் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு 10 நாட்களுக்குள் பண பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது.
ஏற்கெனவே கழக அரசு பொறுப்பேற்றவுடன் முதலமைச்சர் அவர்கள் 05.11.2022 அன்று பால் கொள்முதல் விலையை ரூ.3 உயர்த்தி வழங்கினார்.மேலும் பால் விற்பனை விலை ரூ. 3 (16.05.2021) குறைக்கப்பட்டது. இம்முயற்சிகள் அனைத்தும் தமிழ்நாட்டில் பால் உற்பத்தியை பெருக்குவதோடு கிராம பொருளாதாரம் மேம்பட்டு பால் உற்பத்தியாளர்களின் வாழ்வும் மேம்படுகிறது.
மேலும் தமிழ்நாட்டு மக்களுக்கு தரமான பால் மற்றும் பால் பொருட்களை நியாயமான விலைக்கு விற்பனை செய்ய ஆவின் நிறுவனத்திற்கு உதவியாக அமையும்.இதன் மூலம் விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள், கூட்டுறவு சங்க பணியாளர்கள், ஆவின் ஊழியர்கள், அலுவலர்கள்,மொத்த மற்றும் சில்லரை விற்பனையாளர்கள், பால் முகவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது. எனவே இத்தருணத்தில் அனைவர் சார்பிலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பால்வளத்துறையின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications