சுவர் ஏறிக் குதித்து ஓடிய மாஜிக்கு எங்களை விமர்சிக்க அருகதை இல்லை.. அமைச்சர் மெய்யநாதன் அட்டாக்!
மயிலாடுதுறை : கஜா புயலின் போது தனது சொந்த தொகுதி மக்களால் முற்றுகையிடப்பட்டு சுவர் ஏறி குதித்து ஓடிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஓஎஸ் மணியனுக்கு தற்போது அரசை விமர்சிக்க அருகதை இல்லை என அட்டாக் செய்துள்ளார் அமைச்சர் மெய்யநாதன்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் பல்லாயிரம் ஏக்கர் நிலத்தில் பயிர்கள் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வு மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, திமுக அரசு தூர்வாரும் பணிகளை நிறுத்தியதே கடுமையான சேதத்திற்குக் காரணம் எனக் குற்றம்சாட்டினார்.
அதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் மெய்யநாதன், எடப்பாடி பழனிசாமி உண்மை தெரியாமல் பொய் சொல்கிறார் எனத் தெரிவித்துள்ளார்.

சீர்காழி கனமழை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் கடந்த வாரத்தில் மிகக் கனமழை பெய்தது. சீர்காழியில் ஒரே நாளில் 44 செ.மீ. மழை பெய்ததால், சுமார் 90 ஆயிரம் ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. ஏராளமான குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்தது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 14ஆம் தேதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிச் சென்றார். அதைத்தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சீர்காழி பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

காழ்ப்புணர்ச்சி
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும். பருவமழைக்கு முன்பாக ஏரி, குளங்களை தூர்வார திமுக அரசு தவறிவிட்டது. சீர்காழி அருகே திருவாலி ஏரியை தூர்வாரும் திட்டத்தை நிறுத்தியுள்ளார்கள். காழ்புணர்ச்சி இல்லாமல் மக்கள் நலனை கருத்தில் கொண்டு அதனை செயல்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

ஓஎஸ் மணியன்
அதேபோல கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை முன்னாள் அமைச்சரும், நாகப்பட்டினம் மாவட்ட அதிமுக செயலாளருமான ஓ.எஸ்.மணியன் பார்வையிட்டார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை முகாம்களுக்கு பத்திரமாக அழைத்து வந்து அவர்களுக்கு உரியப் பாதுகாப்பு வழங்க வேண்டிய அரசு, அதனை உரிய முறையில் செய்யாததால் மக்கள் அனைவரும் தற்போது அவதியுற்று வருகின்றனர். கஜா புயலின்போது மரணம் என்கிற நிகழ்வே இல்லாத அளவிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அப்போதைய அதிமுக அரசு சிறப்பாக செயல்பட்டது என்றார்.

அமைச்சர் மெய்யநாதன்
இந்நிலையில், சுற்றுச்சூழல் காலநிலை துறை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு சென்று மக்கள் குறைகளை கேட்டு அறிந்து அவர்களுக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார். இந்நிலையில் திருநகரி, கீழச்சாலை மேலச்சாலை, அல்லிவிலாகம், பெருந்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.

அரசு + திமுக சார்பில் நிவாரணம்
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மெய்யநாதன், "தமிழக முதல்வர் பாதிக்கப்பட்ட சீர்காழி, தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் நிவாரணம் அறிவித்தார். அதன்படி 1,61, 647 பயனாளிகள் பயன்பெறுவார்கள். அரசு நிவாரணம் வழங்கிய நிலையில் திமுக சார்பாக அனைத்து ஊராட்சிகளிலும் நிவாரணம் வழங்கும் பணியை இன்று துவக்கி வைக்கிறோம். முதற்கட்டமாக 7500 குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

சுவர் ஏறிக் குதித்து ஓடினார்
மேலும் பேசிய அவர், "எடப்பாடி பழனிசாமி வந்த இடத்தில் வார்த்தைகளை அள்ளித் தெளித்துவிட்டுச் சென்றுள்ளார். அதிமுகவினர் உண்மைக்கு மாறான பொய் பிரச்சாரத்தை மேற்கொள்கின்றனர். குறிப்பாக கஜா புயலின் போது அதிமுக முன்னாள் அமைச்சர் ஓஎஸ் மணியன் தனது சொந்த தொகுதி மக்களால் முற்றுகையிடப்பட்டு சுவர் ஏறி குதித்து ஓடியவர். அது மக்கள் அனைவருக்கும் தெரியும்.

மணியனுக்கு அருகதை இல்லை
அப்போது அமைச்சராக இருந்த ஓ.எஸ்.மணியன் பாதிப்பே இல்லை எனக் கூறினார். மக்கள் அவரை விரட்டி அடித்தனர். அவர் இன்று மக்களுக்கு நாங்கள் உணவு வழங்கவில்லை எனக் கூறுகிறார். ஆனால் நாங்கள் 12ஆம் தேதி முதல் தற்போது வரை மக்களுக்கான களப்பணியில் ஈடுபட்டு வருகிறோம். ஆகையால் திமுக செயல்பாட்டை பற்றி கூற ஓ.எஸ்.மணியனுக்கு அருகதை இல்லை. நாங்கள் ஒன்றும் அவர்களைப் போல பாதிப்பே இல்லை என பொய் சொல்லிக் கொண்டிருக்கவில்லை.

அன்றும் இன்றும்
அதேபோன்று கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களை அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று பார்க்கவில்லை. ஆனால் தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக வந்து மக்களை சந்தித்து பாதிப்புகள் குறித்து கேட்டறிந்து மின்சாரம் வேளாண்மைத்துறை வருவாய்த்துறை என அனைத்து துறைகளையும் துரிதப்படுத்தி நடவடிக்கை எடுத்தார்.

பொய் சொல்கிறார் எடப்பாடி
சீர்காழி அருகே திருவாலி ஏரியை தூர்வாராமல் தடுத்து நிறுத்தியது திமுக அரசு என உண்மைக்கு புறம்பாக எடப்பாடி பழனிசாமி கூறிச் சென்றுள்ளார். உண்மையிலேயே 2017, 2018 இரண்டு கட்டங்களாக 7 கோடியே 55 லட்சம் மதிப்பீட்டில் பணி தொடங்கப்பட்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் தான் தூர்வாரும் பணி நிறுத்தப்பட்டது என்ற உண்மை கூட தெரியாமல் பேசியுள்ளார்" என காட்டமாக விமர்சித்துள்ளார் அமைச்சர் மெய்யநாதன்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications