இடைத்தரகர்களுக்கு செக்! பத்திரப்பதிவு அலுவலகத்திற்குள் வரக்கூடாது! அமைச்சர் மூர்த்தி அதிரடி!
சென்னை: ஆவண எழுத்தர்களும், இடைத்தரகர்களும் அனுமதியின்றி பத்திரப்பதிவு அலுவலகத்திற்குள் செல்ல அதிரடி தடை விதித்துள்ளார் அமைச்சர் மூர்த்தி.
சொத்து வாங்குபவர்கள், விற்பவர்கள் மட்டும் பத்திரப்பதிவு அலுவலகத்திற்குள் அழைக்கும் போது சென்றால் போதுமானது என்றும் தேவையற்ற கூட்டத்தை தவிர்க்கும் பொருட்டும் முறைகேடுகளை களையும் பொருட்டும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சார் பதிவாளர் அலுவலகங்களில் ரொக்கமாக பணம் கட்ட வேண்டும் என்ற அவசியம் கிடையாது என்றும் கார்டுகள் மூலமும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலமும் பணம் கட்டிக் கொள்ளலாம் என ஏற்கனவே அறிவித்திருப்பதையும் அமைச்சர் மூர்த்தி சுட்டிக்காட்டினார்.
போலி பத்திரப்பதிவுகளை கண்டறிந்து ரத்து செய்வதற்கு இதுவரை 14,000 விண்ணப்பங்கள் வந்திருப்பதாகவும் அதில் 2,000 விண்ணப்பங்கள் மீது தீர்வு வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். பத்திரப்பதிவு துறையில் கடந்த 2 ஆண்டுகளில் எண்ணற்ற மாற்றங்களையும், புதுமைகளையும் கொண்டு வந்திருப்பதாக தெரிவித்தார்.
பத்திரப்பதிவு நடைமுறையை எளிமையாக்குவதற்கான எல்லா பணிகளையும் செய்து வருவதாகவும் பொதுமக்கள் பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு சென்று பணம் கட்டுவதை தவிர்ப்பதற்காகவே ஆன்லைன் பணம் செலுத்தும் முறையை கொண்டு வந்திருப்பதாகவும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
சார்பதிவாளர் அலுவலகங்களில் பணம் கேட்டால் தாராளமாக தன்னிடம் ஊடகத்தினரும், சம்பந்தபட்ட நபர்களும் தெரியப்படுத்தலாம் என்றும் உரிய நடவடிக்கை துறை ரீதியாக மேற்கொள்ளப்படும் எனவும் அவர் உறுதி கொடுத்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications