டாப் டக்கர்.. கனடாவில் அமைச்சர் எம்ஆர்கே ரவுண்ட்! வெளிநாட்டு வேளாண் முறை தமிழ்நாட்டுக்கு செட்டாகுமா?
சென்னை: கனடாவில் உள்ள விவசாயிகள் மாதிரிகளை ஆய்வு செய்ய அந்நாட்டுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சென்றுள்ள நிலையில், அதில் உள்ள சிறப்பான திட்டங்கள் தமிழ்நாடு வேளாண் துறையில் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அரசு முறை பயணமாக கனடா நாட்டிற்கு சென்று உள்ளார். நேற்று ஒட்டாவா மாகாணத்தில் கனடா அரசால் பராமரிக்கப்பட்டு வரும் மேஜர் கில் பார்க் பூங்காவை அவர் பார்வையிட்டார்.

கடந்த ஜூலை 30 ஆம் தேதி கனடா நாட்டிற்கு வருகை தந்து ஒட்டாவா மாகாணத்தில் கனடா அரசால் பராமரிக்கப்பட்டு வரும் மேஜர் கில் பார்க் பூங்காவை பார்வையிட்டார். அச்சமயம் பூங்காவில் உள்ள புராதான சின்னங்களின் விவரங்கள் மற்றும் அங்கே பூங்கா பராமரிப்பில் எந்த வகையான இயந்திரங்கள் உபயோகப்படுத்தப்படுகின்றன, பூங்காவின் அமைப்பு, இந்த பூங்காவில் உள்ள பல்வேறு வகையான மரங்கள் மற்றும் பூச்செடிகளின் விவரங்களையும் கேட்டறிந்தார்.
31 ஆம் தேதி கனடா நாட்டின் தலைநகரான ஒட்டாவா மாகாணத்தில் உள்ள இந்திய தூதரகத்திற்கு சென்ற அமைச்சர் பன்னீர்செல்வத்திடம் =கனடா நாட்டின் இந்திய தூதர் மேதகு சஞ்சய் குமார் வர்மா, கனடா நாட்டின் விவசாய வளங்களை பற்றியும் கனடா நாட்டில் பயன்படுத்தப்படும் உயரிய வேளாண் உற்பத்தி தொழில்நுட்பங்களையும் அங்கு அறுவடைக்கு பின் செய் நேர்த்தி மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களின் ஏற்றுமதி போன்றவற்றை விரிவாக எடுத்துரைத்தார்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் கனடா நாட்டிற்கு சென்று பல்வேறு வேளாண் உத்திகளை கண்டறியும் வகையில் மாணவர்கள் பரிமாற்றம் தொடர்பாகவும், விவசாயிகளுக்கு தரமான உரம் விநியோகிக்கும் வகையில் ஆராய்ச்சி செய்வது தொடர்பாகவும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
ஒட்டாவா மாகாணத்தில் கார்சொனோபி கிராமத்திற்கு சென்று, அங்கு சோயா மொச்சை மற்றும் மக்காச்சோளம், கோதுமை, ஓட்ஸ் பயிர்களையும் மற்றும் பழவகைகள் பயிரிடுவதையும் பார்வையிட்டார். அதேபோல் அங்கு உள்ள காய்கறிகள், பழ வகைகள் விற்பனை நிலையத்தையும் அவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த நிகழ்வுகளின்போது வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் சி.சமயமூர்த்தி, தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை இயக்குநர் பிருந்தா தேவி, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் வி.கீதாலட்சுமி மற்றும் வேளாண் பல்கலைக்கழக இயக்குநர்கள் உடன் இருந்தனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications