ஜாக்கிரதை! போலி பில் தயாரித்து வணிகம் செய்தால் GST பதிவு முடக்கப்படும்.. அமைச்சர் மூர்த்தி வார்னிங்!
சென்னை: அரசுக்கு வருவாய் இழப்பீடு செய்யும் வகையில் போலி பில் பட்டியல் தயாரித்து வணிகம் செய்தால், சம்பந்தப்பட்ட நபர்களின் ஜிஎஸ்டி பதிவு முடக்கப்படும் என்று வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில், பத்திரப் பதிவுத்துறை மற்றும் வணிகவரித்துறை அலுவலகர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டார். அப்போது அதிகாரிகளுக்கு அமைச்சர் மூர்த்தி பல்வேறு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான அனைத்து இணை ஆணையருக்கான பணித்திறன் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், இந்தக் கூட்டத்தில் ஒவ்வொரு அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்தும் அமைச்சர் மூர்த்தி கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து அதிகாரிகளிடம் பேசிய அமைச்சர் மூர்த்தி, அரசுக்கு வருவாய் இழப்பீடு ஏற்படுத்தும் வகையில் போலி பில் பட்டியல் தயாரித்து வணிகம் செய்வோரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபடுபவர்களைக் கண்காணித்து அவர்களுடைய ஜிஎஸ்டி பதிவை முடக்கம் செய்யுமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சர் மூர்த்தியின் உத்தரவை தொடர்ந்து, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில் போலி பில் தயாரித்து வணிகம் செய்பவர்களின் ஜிஎஸ்டி பதிவெண் என்பது முடக்கப்படவுள்ளது. இதன் காரணமாக அதன் பிறகு அவர்கள் வணிகம் செய்ய முடியாத நிலை ஏற்படும்


Click it and Unblock the Notifications
