விஜயகாந்த் உடலுக்கு மத்திய அரசு சார்பில் மரியாதை.. பிரேமலதா கையை பிடித்து கலங்கிய நிர்மலா சீதாராமன்
சென்னை: விஜயகாந்த் உடலுக்கு மத்திய அரசு சார்பில் மலர் வளையம் வைத்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்தின் கையை பிடித்து ஆறுதல் கூறினார்.
தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் நேற்று காலை காலமானார். அவரது உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது. சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல் அடக்கம் செய்யப்பட இருக்கிறது. முன்னதாக விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் உடல் வைக்கப்பட்டு இருந்தது.

தொண்டர்கள் கூட்டம் அளவுக்கதிகமாக வந்ததால், கோயம்பேடு பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்த ஏதுவாக விஜயகாந்தின் உடல் சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டது. தீவுத்திடலில் இன்று நண்பகல் வரை விஜயகாந்தின் உடல் வைக்கப்படுகிறது.
விஜயகாந்தின் உடலுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகிறாரக்ள். இந்த நிலையில், மத்திய அரசு சார்பில் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. விஜயகாந்த் உடலுக்கு மலர் வளையம் வைத்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்தின் கையை பிடித்து துக்கம் அனுசரித்தார். அவருடன் வந்திருந்த தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:- கேப்டன் மறைந்த செய்தி கேட்டு பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டதுடன் உடனடியாக என்னை மத்திய அரசு சார்பாக கிளம்பி போக சொன்னார். இந்த துயரில் பங்கேற்க அறிவுறுத்தினார். அதனால் உடனே கிளம்பி வந்தேன். மனதுக்கு வேதனை தரும் கூட்டத்தில் கலந்து கொண்டேன்.
மக்களுக்காக பாடுபடவர் கேப்டன். சாப்பாடு போடாமல் அனுப்ப மாட்டார் என்பதை திரும்ப திரும்ப சொல்ல தேவையே இல்லை. தமக்கு கிடைத்த வசதிகள் அனைவருக்கும் கிடைக்க ஏற்பாடு செய்தவர். பாகுபாடு இல்லாமல் எல்லோரும் மனிதர்கள் என்ற மனிதநேயத்துடன் இருந்த அரசியல்வாதி. இப்படி ஒரு அரசியல் தலைவரை பார்க்க முடிந்தது. அப்படி உயர்ந்த குணம் கொண்ட கேப்டன் விஜயகாந்த் நம்மிடையே இல்லை.
துயரத்தை எப்படி வெளிப்படுத்தனும் என்று தெரியவில்லை. வெயில், மழையை பொருட்படுத்தாமல் கோடானு கோடி ரசிகர்கள், தொண்டர்கள் வந்துள்ளனர். அவர்களுடன் துயரத்தை பகிர்ந்து கொண்டேன். அதே துக்கத்துடன் என்னை இங்க வர சொல்லி பிரதமர் உத்தரவிட்டார். குடும்பத்தார், சுதீஷ், இரு மகன்களுக்கும், பிரேமலதாவுக்கும் ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
-
தேமுதிக போட்டியிடும் 10 தொகுதிகள் இறுதியானது.. திமுக தலைமையகத்தில் சுதீஷ் சொன்ன சேதி! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி












Click it and Unblock the Notifications