எம்ஜிஆர் தோற்றத்தில் விஜய்.. அப்படி போகாதவரை எந்த பிரச்சினையும் இல்லை.. அமைச்சர் பாண்டியராஜன் பதிலடி
சென்னை : எம்ஜிஆர் தோற்றத்தில் நடிகர் விஜய்க்கு ஒட்டப்பட்ட போஸ்டர் குறித்து தெரிவிக்க முடியாது. எனினும் எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரை சொல்லி ஓட்டுக் கேட்கும் உரிமை தங்களுக்கு தான் உள்ளது என அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்,
Recommended Video
திருவேற்காடு நகராட்சியில் ரூ. 97 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நகராட்சி கட்டிடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரண்டு தினங்களுக்கு முன்பு காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதனை அமைச்சர் பாண்டியராஜன் நேற்று ஆய்வு செய்தார்.
மேலும் நகராட்சிக்கு குப்பைகளை அள்ளும் பேட்டரி வாகனங்கள் மற்றும் இரண்டு பூங்காக்களை திறந்து வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "தமிழ் வளர்ச்சி பொருத்தவரை தமிழுக்கு முன்னுரிமை கொடுத்து அதிமுக அரசு ஏராளமான விஷயம் செய்து வருகிறோம். மத்திய அரசு உதவி என்று இன்னும் அதிகமாக எதிர்பார்க்கிறோம்.

அதிமுகவுக்கு பொருந்தாது
முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியது திமுக ஆட்சிக்கு பொருந்தும், அதிமுக ஆட்சிக்கு பொருந்தாது. வரும் தேர்தலில் சாதனைகளின் அடிப்படையில் வாக்குகள் கேட்கப் போகிறோம்.

மெத்தனம் கூடாது
நாம் பாதுகாப்பாக இருந்து கொண்டால் கொரோனாவின் இரண்டாவது அலை வருவதற்கு வாய்ப்பில்லை. நாம் மெத்தனமாக இருந்து விட்டால் அக்டோபரில் கொரோனாவின் இரண்டாவது அலை வருவதை யாராலும் தடுக்க முடியாது. கொரோனாவை விரட்டி அடிக்கும் பணியில் தமிழகம் முன்னணியில் உள்ளது.

ரசிகர்களின் விருப்பம்
எம்ஜிஆர் தோற்றத்தில் நடிகர் விஜய்க்கு ஒட்டிய போஸ்டர் குறித்து கேட்கிறீர்கள். அது ரசிகர்களின் விருப்பம். அதில் நான் கருத்து சொல்ல முடியாது.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை போல் அவர் இருக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் வைத்துள்ளார்கள். அது வரவேற்க தகுந்த விஷயம் என கருதுகிறேன்.

எங்களுக்கே உரிமை
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயரை சொல்லி அவர்கள் ஓட்டு கேட்டு போகாத வரை எந்த பிரச்சினையும் இல்லை, அவர்களின் பெயரை சொல்லி ஓட்டு கேட்கும் உரிமை எங்களுக்கு தான் உள்ளது என அமைச்சர் தெரிவித்தார். பேட்டியின்போது உடன் நகராட்சி கமிஷனர் செந்தில்குமரன் மற்றும் நகராட்சி அதிகாரிகள் இருந்தனர்.
-
விஜய்க்கு 25 நாள் ஆச்சு.. முதல் ஒப்பந்தம்.. 3 இடத்தில் 3 மெகா திட்டம்.. L&T நிறுவனம் ரூ.18600 கோடி முதலீடு! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு! -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
அடித்து ஆடும் விஜய்! லஞ்சம் வாங்குனா காலி! சென்னை மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
கார்கே மகன் - சித்தராமையாவின் மகனுக்கு இடம்.. கர்நாடகாவின் புதிய அமைச்சர்கள் யார் யார்? முழு லிஸ்ட்












Click it and Unblock the Notifications