கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு ரூ. 4000 & மளிகை பொருட்கள்.. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டிலுள்ள கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு உதவித்தொகை ரூ.4,000, 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகைப் பொருட்கள் வழங்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்துள்ளார்
சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் உள்ள வளாகத்தில் துறைமுகத் தொகுதியில் வசிக்கும் கொரோனவள் வாழ்வாதாரத்தில் பாதித்த ஆயிரம் பேருக்கு 1000 ரூபாய் மதிப்பிலான 12 மளிகை தொகுப்புகள் உடைய பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பிகே சேகர்பாபு மற்றும் ஆயிரம் விளக்கு நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தலைமையில் நடைபெற்றது,

தயாநிதி மாறன்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன், "முதலமைச்சரின் வழிகாட்டுதலின் பேரில் இதுபோன்ற நலத் திட்டங்களைத் தொடர்ந்து செய்து வருகிறோம், கடந்த 10 ஆண்டுகளில் எந்த ஒரு அரசு நிகழ்ச்சிக்கும் அதிமுக எங்களுக்கு அழைப்பு விடுத்தது இல்லை, ஆனால் எங்களது முதல்வர் அனைத்து அரசியல் நிகழ்ச்சிகளுக்கும் மக்களால் தெர்ந்தெடுக்கப்பட்ட அவர்களுக்கு உரிய மரியாதை கொடுத்து அழைப்பிதழ்களை அனுப்பி வருகிறார்" என்றார்.

இந்து கோயில்கள்
அதைத் தொடர்ந்து பேசிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, "தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 36 ஆயிரம் கோவில் எண்ணிக்கையில், ஒரு கால பூஜை திட்டத்தில் 12,595 திருக்கோவில்கள் இடம் பெற்றிருக்கின்றன. இதில் பணியாற்றிவரும் அர்ச்சகர்கள், ஊழியர்களுக்கு நிரந்தர சம்பளம் என்பது கிடையாது, கொரோன நோய்த்தொற்று காலத்தில் அவர்களது வாழ்வாதாரம் பாதிப்பதாக முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது,

சிறப்புத் திட்டம்
இதற்காக ஒரு சிறப்புத் திட்டத்தை இன்றும் முதல்வர் அறிவித்துள்ளார், இவர்களுக்கு ரூபாய் 4 ஆயிரம், 10 கிலோ அரிசி, 15 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கப்படும். இந்தத் திட்டம் கருணாநிதி பிறந்த நாளன்று செயல்படுத்தப்படும், இந்த திட்டம் ஒரு வாரக் காலத்திற்குள் இந்த உதவி சென்றடைவதற்கான நடவடிக்கைகளை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொள்ளும்.

முதல்வர் படம்
கடந்த காலத்திலும் கூட ரேஷன் பொருட்கள் வழங்கும்போது யார் யார் படங்கள் எல்லாம் பிரசுரிக்கப்பட்டு இருந்தது என்று பார்த்திருப்பீர்கள். ஆனால் எங்களுடைய முதல்வர் அரசியல் சாயம் எங்கும் இருக்கக் கூடாது என்பதற்காக அவரது படம்கூட இடம்பெறவில்லை. இதேபோன்று டோக்கன் வழங்குவதிலும் அரசியல் கட்சி ஆளும் கட்சி முழுவதுமாக தலையிடவில்லை" என்று அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
