Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொன்முடி நேற்றே மீண்டும் எம்எல்ஏ ஆகிவிட்டார்.. இன்று முதல் பதவியில் நீடிக்கலாம்.. வழக்கறிஞர் தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் அமைச்சர் பொன்முடி நேற்று தனது எம்எல்ஏ பொறுப்பை திரும்ப பெற்று விட்டார், இன்று முதல் அவர் எம்எல்ஏவாக தொடரலாம் என்று வழக்கறிஞர் எம்பி வில்சன் தெரிவித்துள்ளார்.

அதே சமயம் பொன்முடிக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. ராகுல்காந்தி வழக்கில் பின்பற்றப்பட்ட சட்ட நடைமுறைகள், பொன்முடி விவகாரத்தில் பின்பற்றப்படும். இது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று நெல்லையில் சபாநாயகர் அப்பாவு பேட்டி அளித்துள்ளார் .

Minister Ponmudi becomes MLA again in the misappropriate asset case after SC verdict

சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் அமைச்சரும், திமுக மூத்த தலைவருமான க.பொன்முடிக்கு எதிராக அளிக்கப்பட்ட குற்றவாளி என்ற தீர்ப்பு மற்றும் மூன்றாண்டு சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் நேற்று நிறுத்தி வைத்தது.

நீதிபதி ஏ.எஸ் தலைமையிலான பெஞ்ச் இந்த வழக்கில் அவரது மனைவி பி.விசாலாக்ஷியின் தீர்ப்பு மற்றும் தண்டனையையும் ஓகா நிறுத்தி வைத்தார். பொன்முடி மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக வருவதற்கு இந்த உத்தரவு வழிவகை செய்கிறது.

நேற்று இந்த வழக்கில் உத்தரவு வந்த போது மூன்றாண்டு சிறைத் தண்டனையை மட்டுமே உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்ததாக செய்திகள் வந்தன. மாறாக பொன்முடிக்கு எதிராக அளிக்கப்பட்ட குற்றவாளி என்ற தீர்ப்பு நிறுத்தி வைக்கப்படவில்லை என்று கூறப்பட்டது. இது தொடர்பாக பல குழப்பங்கள் நிலவி வந்த நிலையில் உண்மையில் தீர்ப்பில் சொல்லப்பட்டது என்ன என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.

உண்மையான தீர்ப்பு: அதன்படி பொன்முடிக்கு எதிராக அளிக்கப்பட்ட குற்றவாளி என்ற தீர்ப்பு மற்றும் மூன்றாண்டு சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் நேற்று நிறுத்தி வைத்தது. இருவரின் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹத்கி மற்றும் சித்தார்த் லுத்ரா ஆகியோர் ஆஜராகி வாதாடினர். தமிழக அரசு சார்பில் வக்கீல் டி.குமணன் ஆஜரானார்.

உயர் நீதிமன்றத்தின் பழைய தீர்ப்பு: கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் பொன்முடி சொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளி என்று கூறி.. அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை கொடுக்கப்பட்டது. இதையடுத்து பொன்முடியும் மனைவி விசாலாட்சி, இருவரின் வயது மற்றும் மருத்துவ காரணங்களை சுட்டிக்காட்டி குறைந்த தண்டனை விதிக்க வேண்டும் என்று கை கூப்பி கோரிக்கை விடுத்தார்.

அதற்கு தங்களுக்கு மேல் உள்ள நீதிமன்றமான உச்ச நீதிமன்றத்தில் நிவாரணம் கோரலாம் என நீதிபதி தெரிவித்தார். தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அமைச்சர் பொன்முடி மற்றும் அவர் மனைவி விசாலாட்சி ஆகியோர் சிறை செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும் அமைச்சர் பொன்முடி எம்எல்ஏவாக பதவி வகிக்கும் தகுதியை இழந்துவிட்டார்.

உச்ச நீதிமன்றம்: இந்த நிலையில் பொன்முடி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் அமைச்சரும், திமுக மூத்த தலைவருமான க.பொன்முடிக்கு எதிராக அளிக்கப்பட்ட குற்றவாளி என்ற தீர்ப்பு மற்றும் மூன்றாண்டு சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் நேற்று நிறுத்தி வைத்தது.


வழக்கு பின்னணி: கடந்த 2006 - 2011 ஆம் ஆண்டுகளில் உயர்கல்வித் துறை அமைச்சராக பதவி வகித்த போது, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக, அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக 2011 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து கடந்த 2016 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், இருவரையும் விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்து கடந்த 19ஆம் தேதி தீர்ப்பளித்தார். இதில்தான் தற்போது பொன்முடிக்கு எதிராக தீர்ப்பு வந்துள்ளது

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+