அமைச்சர் பொன்முடியும் வழக்கறிஞர் தான்.. ஆனால் கோர்ட்டுக்கே போகாதவர்.. துரைமுருகன் கிண்டல்!
சென்னை: திமுக சட்டத்துறை சார்பாக நடத்தப்பட்ட மாநாட்டில் அமைச்சர் பொன்முடிவை, கோர்ட்டுக்கே போகாத வழக்கறிஞர் அவர் என்று அமைச்சர் துரைமுருகன் கிண்டல் செய்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இதன் காரணமாக சட்டத்துறை மாநாட்டில் சிரிப்பலை எழுந்தது.
திமுக சட்டத்துறை சார்பாக 3வது மாநில மாநாடு சென்னையில் இன்று நடைபெற்று வருகிறது. இதனை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கொடியேற்ற, அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் மூத்த வழக்கறிஞர்களான கபில் சிபல், முன்னாள் தேர்தல் ஆணையர் குரேஷி, இந்து என்.ராம், எம்எல்ஏ பரந்தாமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

மாலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ளவிருக்கிறார். இந்த நிலையில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், இந்த மாநாட்டை நடத்துவதற்கு குறைந்தது ஒருமாதம் காலமாவது தேவைப்பட்டிருக்கும். இந்த ஒருமாதமாக இளங்கோ நீதிமன்றம் சென்றாரா என்பது தெரியாது. ஒருநாள் நீதிமன்றம் சென்றாலே லட்சக்கணக்கில் ஊதியம் பெறுபவர்.
நீதிமன்றத்திற்கு போகாத வழக்கறிஞர் அல்ல. நீதிமன்றம் சென்றால் நன்றாக சம்பாதிக்கக் கூடியவர். பெரிய ஊதியத்தை ஒதுக்கிவிட்டு, மாநாட்டு பணிகளில் ஈடுபட்டிருப்பதை பார்த்து பெருமைப்படுகிறேன். இந்த மாநாட்டில் அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். பொன்முடியும் ஒரு வழக்கறிஞர் தான். ஆனால் கோர்ட்டுக்கே போகாதவர்.
அவர் வழக்குக்கு மட்டும் போய்விட்டு வருவார். நமது சட்டத்துறை அமைசச்ர் ரகுபதியும் வழக்கறிஞர் தான். அவரும் பெரிதாக நீதிமன்றம் செல்லாதவர் தான். பேசுகின்ற நானும் அப்படிதான். ஒருமுறை நீதிமன்றம் சென்ற போது எனது சீனியருக்கு திட்டு வாங்கி கொடுத்தேன். அதன்பின் ஒருகட்டத்தில் வழக்கறிஞராக ஓராண்டுக்கு மேல் பணியாற்றிய பின், அரசியலுக்கு வந்துவிட்டேன் என்று தெரிவித்துள்ளார். துரைமுருகன் பேச்சால் மாநாட்டில் சிரிப்பலை எழுந்தது.












Click it and Unblock the Notifications