தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. பொன்முடியின் அமைச்சர் பதவிக்கு ஆப்பு? டெல்லிக்குப் பறந்த பரபர புகார்!
சென்னை: சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி இந்து மதம் குறித்தும், பெண்கள் குறித்தும் அவதூறாக பேசியதாக அவரது துணை பொது செயலாளர் பதவி திமுக தலைவர் ஸ்டாலினால் பறிக்கப்பட்டது. தனது பேச்சுக்கு பொன்முடி வருத்தமும் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு எதிராக வழக்குப் பதிய தமிழ்நாடு டிஜிபிக்கு உத்திரவிட வேண்டும் என தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த வாரம் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி பேசிய பேச்சு திமுக தலைமையையே சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. நிகழ்ச்சியில் பேசிய அவர்," ஒரு பெண், நீங்கள் சைவமா, வைணவமா? என்று கேட்கிறார். அது அந்த பையனுக்கு புரியவில்லை.. விலைமாது வீட்டில் சைவமா, வைணவமா என்று கேட்கிறார்கள் என்று குழம்புகிறார்." என பேசினார்.

மேலும், சைவமென்றால் பட்டை, வைணவம் என்றால் நாமம் என்று மேடையில் செய்து காட்டினார். அதுமட்டுமல்லாமல் சைவம், வைணவம் என்றால் என்ன? என்பதற்கு மோசமான ஒப்புமையும் அளித்தார். இதனால் அவர் பேச்சு சர்ச்சையான நிலையில், கனிமொழி எம்பி உள்ளிட்ட சொந்த கட்சியினரே கடுமையாக விமர்சித்தனர்.
இதற்கிடையே அமைச்சர் பொன்முடியை திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்நிலையில், பெண்களையும், இந்து சமய நம்பிக்கையையும் கேவலமாக பேசியவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார் பொன்முடி. இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,"பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஒரு உள்அரங்கக் கூட்டத்தில், தகாத பொருளில் தவறான சொற்களைப் பயன்படுத்தி நான் பேசிய பேச்சுக்கு மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இந்தத் தகாத கருத்தை நான் பேசியது குறித்து உடனடியாக மனப்பூர்வமாக வருந்தினேன். நீண்டகாலம் பொது வாழ்க்கையில் உள்ள எனக்கு இதுபோன்ற தடுமாற்றம் ஏற்பட்டது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன். பலருடைய மனதைப் புண்படுத்தும் வகையில் இப்பேச்சு அமைந்துவிட்டது குறித்தும், அவர்கள் தலைகுனியும் சூழல் ஏற்பட்டது குறித்தும் நான் மிகவும் மனம் வருந்துகிறேன். மனம் புண்பட்ட அனைவரிடமும் நான் பேசிய பேச்சுக்கு மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்" என கூறியிருந்தார்.
இந்த நிலையில் அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு எதிராக வழக்குப் பதிய தமிழ்நாடு டிஜிபிக்கு உத்திரவிட வேண்டும் என தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது .முன்னதாக பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக பொன்முடி மீதும், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரையில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். இதேபோல ஹிந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் கொடுத்துள்ளது.
அமைச்சரின் சர்ச்சை பேச்சு தொடர்பாக பாஜக, அதிமுக ஆகியவையும் போர்க்கொடி தூக்கி உள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் புகார் அளித்தும் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், அவர் மீது வழக்குப் பதிய டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும் என மாநில, தேசிய மகளிர் ஆணையத்தில் பாஜக வழக்கறிஞரான மணி என்பவர் புகார் கொடுத்து இருக்கிறார்.
ஆபாசமாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் பேசியுள்ள பொன்முடிக்கு எதிராக கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொன்முடி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளது. மகளிர் ஆணையம் விரைவில் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இதனால் அவர் அமைச்சர் பதவிக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று அமைச்சர் பொன்முடி தனது பதவியை இழந்தார். அதற்கு பிறகு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மீண்டும் அமைச்சராக பதவி ஏற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தொடர் விமர்சனங்கள் வருவதால் தற்காலிக ஏற்பாடாக பொன்முடியிடம் இருந்து அமைச்சர் பதவி பறிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications