திணற திணற விசாரிக்கும் ED.. அமைச்சர் பொன்முடி மகன் கௌதமசிகாமணியிடம் இன்று காலை முதல் கிடுக்கிப்பிடி!
சென்னை: அமைச்சர் பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி திமுக எம்.பியுமான கௌதம சிகாமணி அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்றும் விசாரணைக்கு ஆஜரானார். சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கவுதம சிகாமணியிடம் காலை முதல் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் நேற்று முன்தினம் காலை 7 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் மத்திய காவல் படையினரின் பாதுகாப்புடன் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமாக சென்னையில் உள்ள வீடு, அலுவலகம், விழுப்புரத்தில் உள்ள வீடு, பொன்முடியின் மகனும் கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பியுமான கௌதம சிகாமணி வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சர் பொன்முடி வீட்டில் ரெய்டு: செம்மண் குவாரி தொடர்பாக 2012 ஆம் ஆண்டு அமைச்சர் பொன்முடி மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், சட்ட விரோத செம்மண் குவாரி மூலம் கிடைக்கப்பெற்ற பல லட்ச ரூபாய் பணம் பல்வேறு பரிவர்த்தனைகள் மூலம் பினாமிகள் பெயரிலான வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது, இந்தோனேசியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 2 நிறுவனங்களின் வங்கி கணக்குகளுக்கு முறைகேடாக பணம் அனுப்பப்பட்டுள்ளது என கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை இந்த ரெய்டை மேற்கொண்டது.
அமைச்சர் பொன்முடி வீட்டில் நடந்த சோதனையில் ரூ.81.70 லட்சம் கணக்கில் வராத ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. முறையாக விளக்கம் அளிக்கப்படாத ரூ.13 லட்சம் மதிப்பிலான பிரிட்டிஷ் பவுண்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் கணக்கு விவரங்களுக்கு அவர்கள் சொல்லும் காரணம் நம்பத்தகுந்ததாக இல்லை என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
நள்ளிரவில் விசாரணை: 13 மணி நேர ரெய்டுக்குப் பிறகு நேற்று முன்தினம் இரவு அமைச்சர் பொன்முடி அமலாக்கத்துறை அதிகாரிகளால் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதிகாலை 3 மணிக்கு மேல் தான் அமைச்சர் பொன்முடி வீட்டுக்குச் சென்றார்.
மறுபடியும் நேற்று மாலை 4 மணிக்கு மீண்டும் பொன்முடி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை சம்மன் கொடுத்தது. அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி ஆகியோரிடம் நேற்று மாலை முதல் சுமார் 6 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தனித்தனியாக வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அமைச்சர் மகனிடம் இன்றும் விசாரணை: இந்நிலையில், அமைச்சர் பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற எம்.பி.யுமான கௌதம சிகாமணி அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு ஆஜராகியுள்ளார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டவிரோத செம்மண் குவாரி மூலமாக வந்த வருவாய் வெளிநாட்டில் முதலீடு செய்யப்ப்பட்டுள்ளதா, எந்தெந்த வகையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது என அமலாக்கத்துறை அதிகாரிகள் கவுதம சிகாமணியிடம் துருவித் துருவி விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த 2020ஆம் ஆண்டில் கௌதம சிகாமணிக்குச் சொந்தமான ரூ.8.6 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் பொன்முடி இன்று காலை சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் இல்லத்திற்குச் சென்று முதல்வரைச் சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது. அப்போது, அமலாக்கத்துறையினரின் விசாரணை தொடர்பாக முதல்வரிடம் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அமைச்சர் பொன்முடியின் மகன் தொடர் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications