2015 சென்னை வெள்ளம்.. அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தொடர்பு எல்லையில் இல்லையே.. பிடிஆர் பொளேர்
சென்னை: 2015-ஆம் ஆண்டு சென்னை வெள்ளத்தின்போது செம்பரம்பாக்கம் ஏரியை திறப்பதில் முடிவெடுக்க அப்போதைய முதல்வரை தொடர்பு கொள்ள முடியவில்லை என சிஏஜி அறிக்கையில் உள்ளது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடர் குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று நீர்வளத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதமும், வாக்கெடுப்பும் நடக்க உள்ளது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மானியக் கோரிக்கையை தாக்கல் செய்தார்.
அப்போது திமுக எம்எல்ஏ நந்தகுமார் பேசுகையில் அதிமுக ஆட்சியின்போது கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படாததே 2015ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கு காரணமாக அமைந்தது என கூறினார்.

எடப்பாடி பழனிச்சாமி
அப்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில் சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரி மட்டுமல்லாது, அதற்கு கீழ் 100 ஏரிகள் இருக்கின்றன. அந்த ஏரிகள் நிரம்பியதால்தான் நீர் வெளியேறியது என்றார். அப்போது குறுக்கிட்ட எம்எல்ஏ நந்தக்குமார், உரிய நேரத்தில் திறந்து விடப்படாததால் செம்பரம்பாக்கம் ஏரி உடைத்து நீர் வெளியேறியது என கூறினார்.

செம்பரம்பாக்கம் ஏரி உடையவில்லை
அதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, "செம்பரம்பாக்கம் ஏரி உடையவில்லை. அணை நிரம்பியதால் உபரி நீர் வெளியேற்றப்பட்டது" என்றார். இதற்கு காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை பேசுகையில், செம்பரம்பாக்கம் ஏரியை திறக்க 4 நாட்களாக பொதுப் பணித் துறை அதிகாரிகள் முதல்வரின் உத்தரவுக்காக காத்திருந்தனர்.

அணைகள் உடைப்பு
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து ஒரே நாளில் அதிகளவு நீர் வெளியேற்றப்பட்டது என்றார். இதற்கு எடப்பாடி பழனிச்சாமி பதில் அளிக்கையில் அணைகளோ ஏரிகளோ நிரம்பும் போது திறந்து விடுவது வழக்கமான நடைமுறைதான். முதல்வரின் உத்தரவிற்காக காத்திருக்கவில்லை. மழைக் காலங்கள், பேரிடர் காலங்களில் அணை நிரம்பும் போது அணையை திறக்க அதிகாரிகளே முடிவு எடுக்கலாம் என்றார்.

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதில்
இதற்கு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் 2015 ஆம் ஆண்டு தணிக்கைக் குழு அறிக்கை சட்டப்படியும் மரபுப்படியும் வைக்க வேண்டும். ஆனால் வைக்கப்படவில்லை. அப்போது திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது சட்டசபையில் கேள்வி கேட்ட போது ஆளுங்கட்சி தணிக்கை குழு வழங்கிய அறிக்கையில் உடன்பாடு இல்லை.

தணிக்கை குழு அறிக்கை
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, தணிக்கை குழு அறிக்கை வெளியிடப்பட்டது. 2015 சென்னையில் வெள்ளம் வந்தற்கு இரண்டு காரணங்கள் தணிக்கை குழு அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. 2015க்கு முன்னர் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறைகூட, மாநில பேரிடர் மேலாண்மை குழு கூட்டப்பட வில்லை. அதனால் அவர்களுக்கு விதிமுறை தெரியவில்லை. அடுத்ததாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்த போது அதை திறப்பதற்கு முதலமைச்சரிடம் அனுமதி வரவில்லை. அதனால் தான் செம்பரம்பாக்கம் ஏரி அது ஒரே நாளில் திறந்துவிடப்பட்டது என அப்போது ஒன்றிய தணிக்கை குழு அறிக்கையில் வெளியிடப்பட்டது என்று கூறினார்.

மனிதனால் ஏற்படுத்தப்பட்ட பேரிடர்
கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னையில் வெள்ளம் ஏற்பட்டதற்கு காரணம் மனிதனால் ஏற்படுத்தப்பட்டது என்றும் சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 1, 2015 ஆம் ஆண்டு தேதி முதல் அடுத்த நாள் வரை 29 ஆயிரம் கனஅடி நீரை அதுவும் வெறும் 21 மணி நேரத்தில் வெளியேற்றியிருக்கிறார்கள், பொதுவாக 21 ஆயிரம் கனஅடிதான் வெளியேற்ற வேண்டும். ஆனால் இவர்கள் 29 ஆயிரம் கனஅடி நீரை திறந்துள்ளார்கள் என்றால் இது மனிதனால் ஏற்படுத்தப்பட்டப் பேரிடர் ஆகும் என கூறிய சிஏஜி 127 பக்க அறிக்கையை வெளியிட்டிருந்தது.

முன்னறிவிப்பின்றி திறந்த ஏரி
2015 ஆம் ஆண்டு சென்னையில் கனமழை கொட்டிய போது திடீரென குறுகிய முன்னறிவிப்புடன் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டது. அப்போது 29 ஆயிரம் கனஅடி நீர் செம்பரம்பாக்கம் ஏரியில் திறந்துவிடப்பட்டதால் நகருக்குள் வெள்ளநீர் புகுந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டது. ராணுவம் வந்து உணவு பொட்டலங்கள் வழங்கும் அளவுக்கு நிலை மோசமாக இருந்தது. 24 அடி கொள்ளளவு கொண்டது செம்பரம்பாக்கம் ஏரி. 22 அடி நிரம்பியதும் அது திறக்கப்படுவது வழக்கம். சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் செம்பரம்பாக்கமும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

உணவுக்காக காத்திருப்பு
அந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலம் என்பதால் 490 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. 100 ஆண்டுகளில் அதிக அளவு மழை பெய்த ஆண்டு 2015. இதனால் நிறைய மரங்கள் முறிந்து விழுந்தன. சென்னையின் முக்கிய பகுதிகளில் தண்ணீரில் மிதந்தன. ஒரு சில இடங்களில் முதல் தளம் வரை தண்ணீர் வந்ததால் மக்கள் தங்கள் பொருட்களை இழந்தனர். கடும்குளிரில் ராணுவ ஹெலிகாப்டரில் இருந்து கொடுக்கப்படும் உணவுக்காக காத்திருந்தனர்.

துண்டிக்கப்பட்ட சாலைகள்
ஆளை மூழ்கடிக்கும் தண்ணீர் என்பதால் அந்த இடங்கள் துண்டிக்கப்பட்டன. பேரிடர் மீட்பு படையினர் படகுகளில் சென்று அவர்களை மீட்டு வந்தனர். இந்த மழையால் நன்றாக வசதி இருக்கும் நபர்கள் கூட தங்கள் குழந்தைகள் குடிக்க பால் இல்லாத அளவுக்கு அவதியடைந்தனர். சிலர் மனசாட்சியே இல்லாமல் பால், காய்கறிகள், அத்தியாவசிய பொருட்களை வீட்டுக்கே கொண்டு வருகிறோம் என்ற பெயரில் கொள்ளையடித்தனர். இதனால் ஒவ்வொரு முறையும் மழை பெய்தாலே அனைவரின் கண்களிலும் 2015 சென்னை வெள்ளம் நிழலாடும். 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு கடந்த 2020 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது முதல்முறையாக செம்பரம்பாக்கம் ஏறியிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டது. அப்போது பலர் அஞ்சினர். ஆனால் குறைந்த அளவு நீரே திறந்துவிடுவதாக அதிகாரிகள் விளக்கம் அளித்தவுடன் மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.
-
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
கூட்டணி மாறியதால் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கலை! ஆனால் அது உண்மைதான்! எடப்பாடி பழனிசாமி -
நகைக்கடன் வைத்த 3 பேரில் ஒருவர் கவனிக்கலனா பிரச்சனை? RBI எச்சரிக்கை என்ன சொல்கிறது? -
எத்தனை வருட சோகம்.. எவ்வளவு டிரைவர்கள் ஏக்கம்.. முடிவிற்கு வரும் தொப்பூர் கணவாய் கொடூரம்.. எப்படி? -
ரூ.1 லட்சம் கோடி இழப்பை சந்தித்த அம்பானி குடும்பம்.. பங்குச் சந்தையில் என்ன நடந்தது? -
2005ல் பல்லாவரம் ரேடியல் சாலையில் 10 லட்சத்திற்கு இடம் வாங்கியிருந்தால் இன்று என்ன விலை தெரியுமா? -
பலரின் வேட்புமனு நிராகரிக்கப்படலாம்.. போச்சு விஜய் தவெகவிற்கு இருக்கும்... பெரிய சிக்கலே இதுதான்! -
நேரம் பார்த்து அடிக்கும் சவுதி அரேபியா.. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அச்சம்? -
அரசு பேருந்தில்.. வழித்தட டிஸ்ப்ளேவில் 'தவெக' என ஓடியதால் ஷாக்! போக்குவரத்துக் கழகம் விளக்கம்












Click it and Unblock the Notifications