திமுகவில் பொதுச் செயலாளர் யார்.. அறிவித்தால் பூகம்பம் வெடிக்கும்?.. அமைச்சர் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவில் பொதுச் செயலாளராக யாரை நியமித்தாலும் பூகம்பம் வெடிக்கும் என தமிழக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

கடந்த 47 ஆண்டுகளாக பேராசிரியர் க அன்பழகன் பொதுச் செயலாளராக இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் கடந்த 7-ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இந்த நிலையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Minister R.B.Udhayakumar says about DMK General Secretary

இந்த பதவியை பிடிக்க மூத்த தலைவர்கள் துரைமுருகன், டி ஆர் பாலு, எ வ வேலு உள்ளிட்டோரிடையே கடும் போட்டி நிலவுவதாக தெரிகிறது. பொதுச் செயலாளர் பதவி என்பது அலங்கார பதவி இல்லாமல் ஆளுமை பதவி என்பதால் இந்த பதவியை கைப்பற்ற மூத்தவர்கள் துடிக்கிறார்கள்.

ஆனால் ஸ்டாலின் யாரை அறிவிப்பார் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதுகுறித்து சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வருவாய்த் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் கலந்து கொண்டார். அவர் கூறுகையில் திமுக பொதுச் செயலாளராக யார் நியமிக்கப்பட்டாலும் அக்கட்சியில் பூகம்பம் வெடிக்கும். ஏனெனில் 47 ஆண்டுகளுக்கும் மேலாக முதுபெரும் தலைவர் அன்பழகன்தான் திமுகவின் பொதுச் செயலாளராக இருந்தார்.

அவரின் பதவி குறித்து யாரும் கேட்கவில்லை. அவர் மூத்தவர், முனைவர், அவரை இனமானப் பேராசிரியர் என சொல்கிறோம். தற்போது யார் பொதுச் செயலாளராக நியமிக்க போகிறார்கள் என உதயகுமார் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+