பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மானியக் கோரிக்கை! அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளியிட்ட அறிவிப்புகள் என்ன?
சென்னை: பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் அமைச்சர் ராஜகண்ணப்பன்.
பிற்படுத்தப்பட்டோருக்கு பெரியளவில் ஏதேனும் முக்கிய அறிவிப்புகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், அது போன்று எதுவும் நடக்கவில்லை.
இதனிடையே பிற்படுத்தப்பட்டோருக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளியிட்ட அறிவிப்புகளின் விவரம் வருமாறு;

இ நூலகம்
275 கல்லூரி விடுதிகளில் 2 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் இணைய வழி நூலகம் E-Library அமைக்கப்படும்.
பள்ளி மாணவியர் விடுதிகளில் காலியாக உள்ள 3,224 இடங்களில் 48 இலட்சத்து 36 ஆயிரம் ரூபாய் செலவில் கல்லூரி மாணவியர் தங்க அனுமதி அளிக்கப்படும்.

25 குழுக்கள்
சலவைத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றவர்கள் 10 நபர்களை இணைத்து ஒரு குழு என 25 குழுக்களுக்கு, 25 நவீன முறை சலவையகங்கள் 75 இலட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தித்தரப்படும்.
தையல் தொழிலில் ஈடுபட்டுவருகின்றவர்கள் 10 நபர்களை இணைத்து ஒரு குழு என 25 குழுக்களுக்கு, 25 ஆயத்த ஆடை அலகுகள் (Readymade Garments Units) 75 இலட்சம் ரூபாய் செலவில் அமைத்துத்தரப்படும்.

சீரமைப்பு பள்ளிகள்
11ஆம் வகுப்பு பயிலும் கள்ளர் சீரமைப்பு பள்ளி மாணவ, மாணவியரை மாநில அளவில் கல்வி சுற்றுலா அழைத்துச் செல்வதற்கு 49 இலட்சத்து 53 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
விடுதிகள் மற்றும் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியருக்கு ஆண்டுதோறும் 3 முறை இலவச மருத்துவப்பரிசோதனை செய்வதற்கென வழங்கப்பட்டு வரும் இடைநிகழ் செலவினம் ரூ.1,000-லிருந்து, ரூ.3,000 ஆக 32 இலட்சத்து 98 ஆயிரம் ரூபாய் செலவில் உயர்த்தப்படும்.

பெரியளவில் இல்லை
பிற்படுத்தப்பட்டோருக்கு பெரியளவில் ஏதேனும் முக்கிய அறிவிப்புகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், அது போன்று எதுவும் நடக்கவில்லை. அமைச்சர் ராஜகண்ணப்பனை பொறுத்தவரை போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்துவிட்டு அண்மையில் தான் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டு வந்தார். இதனால் மானியக்கோரிக்கை அறிவிப்புகளை தயாரிப்பதற்கான கால அவகாசம் அவருக்கு குறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications