Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பது எப்போது? தேதி சொன்ன அமைச்சர் சேகர்பாபு.. சென்னை மக்கள் குஷி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மக்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கும் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்பதை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

வளர்ந்து வரும் நகரமயமாக்கல் சென்னையை நோக்கி ஏராளமான மக்களை நகர்த்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சென்னைக்கு வரும் புலம் பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. எனவே சென்னை பெருநகரத்தின் மக்கள் தொகை 1 கோடியை கடந்திருக்கிறது.

Minister Sekar Babu announced that Kilambakkam Bus terminal will be opened in Tamil New Year

இவர்களில் பெரும்பாலானோர் தென் மாவட்டங்களிலிருந்து வருகின்றனர். அதேபோல விழா நாட்களில், பண்டிகை தினங்களில் இம்மக்கள் பெரிய அளவில் சொந்த ஊரை நோக்கி படையெடுக்கின்றனர். ஆனால் இவர்களுக்கான முறையான போக்குவரத்து வசதி செய்து கொடுக்கப்படவில்லை என்று தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.

தாம்பரம், திருவான்மியூர் போன்ற புறநகர் பகுதிகளில் தென் மாவட்டங்களுக்கு செல்ல பேருந்துகள் இயக்கப்பட்டாலும், அவை குறைந்த எண்ணிக்கையில்தான் இயக்கப்படுகின்றன. எப்படி இருந்தாலும் கோயம்பேடு வந்தால்தான் பஸ் கிடைக்கும் என்கிற சூழல் இருக்கிறது. அப்படியே கோயம்பேடு வந்து பஸ் புடிச்சாலும் பெருங்களத்தூரை தாண்டுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது.

இந்த பிரச்னையை சமாளிக்கதான் வண்டலூரையடுத்த கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையத்தை கட்டுவது என்று கடந்த அதிமுக ஆட்சியில் முடிவெடுக்கப்பட்டது. இதன்படி 88 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி ரூ.400 கோடியில் கடந்த 2019ம் ஆண்டு பேருந்து நிலையம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த பணிகள் 70-80 சதவிகிதம் முடிந்தபோது ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதிகாரிகள் மாற்றப்பட்டனர். புதிய அதிகாரிகள் இந்த பேருந்து நிலையத்தை ஆய்வு செய்ததில் ஏராளமான பிரச்னைகள் இருப்பதை கண்டுபிடித்தனர்.

குறிப்பாக மழைநீர் வடிகால் இல்லாமல் இருந்தது, பேருந்துகள் வெளியேறுவதற்கான பாதை குறுகலாக இருந்தது, பேருந்து நிலையத்தை சுற்றி டிராபிக் ஜாம் ஆகாமல் தடுக்க அப்பகுதிகளை விரிவுப்படுத்த தவறியது போன்றவை அடையாளம் காணப்பட்டன. இதனையடுத்து ஒட்டுமொத்த கட்டமைப்பையே மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. இருப்பினும் மொத்தமாக மாற்றாமல் எவையெல்லாம் தவறவிடப்பட்டுள்ளதோ அதை மட்டும் மாற்றுவது என்று முடிவெடுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.

இந்த பணிகள் காரணமாகவும், கொரோனா தொற்று பாதிப்பு உள்ளிட்ட காரணங்களாலும் இந்த பேருந்து நிலையம் திறப்பது தாமதமாகியது. எனினும் கடந்த 2022ம் ஆண்டு இது திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் திட்டமிட்டபடி திறக்க முடியவில்லை. காரணம் இந்த பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளை மேம்படுத்தாமல் இருந்ததுதான். எனவே ரூ.70 கோடி செலவில் சுற்று சாலை அமைப்பது, சாலைகளை விரிவாக்கம் செய்வது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இது திட்டமிடப்பட்டதை விட 25% கூடுதல் செலவாகும்.

இவ்வாறு எல்லா பணிகளும் மேற்கொள்ளப்பட்டு ஒருவழியாக அனைத்து பணிகளும் 99% நிறைவடைந்துள்ளன. இவ்வாறு திறக்கப்பட்டால் இதில் 2,000க்கும் அதிகமான பேருந்துகள் வரை வந்து செல்லும், இது தவிர 270 கார்கள், 3,500 பைக்குகள் பார்க் செய்துகொள்ளலாம். முதற்கட்டமாக தென் மாவட்டங்களுக்கு அதிக அளவிலும், மத்திய மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு குறைவான அளவில் பேருந்துகளும் இயக்கப்படும். அதன் பின்னர் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் இந்த பேருந்து நிலையம் எப்போது திறக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு மேலெழுந்திருந்தது. இதற்கு அமைச்சர் சேகர்பாபு பதிலளித்துள்ளார். இன்று பேருந்து நிலையத்தை ஆய்வு செய்த அவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறியதாவது, "இந்த பேருந்த நிலையம் பயன்பாட்டிற்கு வரும்போது 2310 பேருந்துகள் தினந்தோறும் இங்கிருந்து இயக்கப்படும். இதில் 840 பேருந்துகள் ஆம்னி பேருந்துகள் ஆகும். இந்த பேருந்து நிலையத்தை ஒரே நேரத்தில் 1 லட்சம் பேர் வரை பயன்படுத்த முடியும்.

இங்கு, பயணிகளுக்கு தேவையான உணவு வசதி, மருத்துவ சிகிச்சைக்கான வசதி, மருந்து மாத்திரைகளை வாங்க பார்மசி, ஓட்டுநர் மற்றும் நடத்தினார்கள் ஓய்வெடுக்க ஓய்வறைகள் ஆகிய வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. அதேபோல தீ தடுப்பு வசதிகள், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, தடையற்ற மின்சார வசதி, பேருந்து நிலையங்களுக்கு தேவையான பெட்ரோல் டீசல் நிலையம் உள்ளிட்டவையும் செய்யப்பட்டுள்ளன. இங்கு புற காவல் நிலையம் அமைப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதியளித்துள்ளார். எனவே நிரந்தர காவல் நிலையம் அமைக்கப்படும்.

இந்த பேருந்து முனையம், வரும் தமிழ் புத்தாண்டான தை 1ம் தேதிக்குள் பயன்பாட்டுக்கு வரும். முதலமைச்சர் மு க ஸ்டாலின் இந்த பேருந்து நிலையத்தை திறந்து வைப்பார்" என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+