மனசாட்சி இருக்குற யாரும் ரூ.1000 உரிமை தொகை திட்டத்தை குறைசொல்ல மாட்டாங்க: அமைச்சர் சேகர்பாபு ரிப்ளை
சென்னை: மனசாட்சி உள்ள யாரும் பெண்களுக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை குறை சொல்ல மாட்டார்கள் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். அண்ணாமலை, இத்திட்டம் குறித்து விமர்சித்த நிலையில் சேகர்பாபு இவ்வாறு கூறியுள்ளார்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலமாக தமிழ்நாட்டில் உள்ள 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் துவக்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1000 செலுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் பொதுமக்கள், பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை வரவேற்கும் விதமாக சென்னை கொளத்தூர் எவர்வின் வித்யாஷ்ரம் பள்ளி மாணவிகள் 1000 பேர் தங்கள் கையில் வண்ணமிகு பூங்கொத்துக்களுடன் 1000 போன்ற வடிவமைப்பில் அமர்ந்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர். மேலும் மலர்களைக் கொண்டு, "கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் முதல்வருக்கு நன்றி" என்ற வாசகங்களையும் வடிவமைத்திருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா மட்டுமல்ல உலகமே உற்றுப் பார்க்கும் அளவிற்கு மகளிருக்கு கலைஞர் உரிமைத்தொகை வழங்குகின்ற திட்டத்தை நேற்றைக்கு காஞ்சிபுரத்தில் முதல்வர் துவக்கி வைத்து ஒரு கோடியே 6 லட்சத்து ஐம்பதாயிரம் பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கி சரித்திரத்தில் இடம்பெற்றுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

தமிழக முதல்வர் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நாள் முதல் கொரோனா காலகட்டத்தில் நான்காயிரம் ரூபாய் அறிவித்த நாளாக இருந்தாலும் சரி. மகளிருக்கு விடியல் பயணம் என்றாலும் சரி, சுய உதவிக் குழுக்கள் கடன் தள்ளுபடி என்றாலும் சரி, நகைக்கடன் தள்ளுபடி என்றாலும், நான் முதல்வன் திட்டம் என்றாலும், கல்லூரி மாணவிகளுக்கு ஊக்கத்தொகை திட்டம் என்றாலும், பெண்ணினத்தின் முன்னேற்றத்திற்காக, பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுகின்ற முதலமைச்சரை இன்றைக்கு தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து தாய்மார்களும் பாராட்டி புகழ்ந்து போற்றுகின்றனர்.
இதனை பார்க்கும்போது நீண்ட நெடிய உடல் ஆரோக்கியத்துடன் முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து நல்லாட்சி தருவார் என்ற நம்பிக்கை வருகிறது. அந்த வகையில் சிறப்பு வாய்ந்த இந்த திட்டத்தை ஒட்டுமொத்த இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் செயல்படுத்துவதற்கு ஆர்வத்தோடு உள்ளனர். இது நமது முதல்வருக்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையில் உள்ளது. ஒரு பெரிய திட்டம் செயல்படுத்துகின்ற போது சிறு சிறு பிரச்சனைகள் வரத்தான் செய்யும். ஓரிரு நாளில் அவை சரி செய்யப்பட்டு விடும்.
இவ்வளவு பெரிய மெகா திட்டம் அழகாக, மிக நேர்த்தியாக செயல்படுத்தப்பட்டுள்ளது. முதல்வரின் ஓராண்டு தொடர் நடவடிக்கையால் ஒவ்வொரு பிரச்சனையும் அவரே நேரடியாக அணுகி பிரச்சனைகளை தீர்த்து வைத்து இந்தத் திட்டத்தை அமல்படுத்தியுள்ளார். அந்த வகையில் நேற்று இந்த திட்டத்தை முதல்வர் தொடங்கினாலும் அதற்கு முன்தினமே பலருக்கும் இந்த திட்டத்தின் வாயிலாக பணம் சென்றடைந்து விட்டது. இதனால் இந்த திட்டத்தை பற்றி எந்தவித குறைகளும் கூற முடியாதவர்கள் ஏதாவது தங்கள் வாய்க்கு அவல் கிடைக்குமா என எதிர்பார்க்கிறார்கள். முதல்வரின் கனவு திட்டம், முதல்வரின் தொலைநோக்கு திட்டம். இது முதல்வரின் திட்டமிடலுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி தான் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம். " என்றார்.
அப்போது செய்தியாளர்கள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ரூ.1000, தமிழ்நாட்டில் பாதி பெண்களுக்கு கிடைக்காது எனக் கூறியுள்ளாரே எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சேகர்பாபு, "அண்ணாமலைக்கு குறை சொல்வதே ஒரு வேலை. 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்களுக்கு உரிமைத்தொகை கிடைத்துள்ளது. ஏழை எளிய அடித்தட்டு மக்களுக்கு கிடைக்கின்ற உதவியை மனசாட்சி உள்ள யாரும் இந்த திட்டத்தை குறை சொல்ல மாட்டார்கள்" எனத் தெரிவித்தார்.
-
ஹோட்டல்களுக்கு குட் நியூஸ்..! 23ஆம் தேதி முதல் கூடுதல் வணிக சிலிண்டர்கள்.. மத்திய அரசு அறிவிப்பு! -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்!












Click it and Unblock the Notifications