குத்தம்பாக்கம் பேருந்து முனையம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது? அமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
சென்னை: பூந்தமல்லியை அடுத்த திருமழிசையில் தொடங்கப்பட்டு வரும் குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்தின் பணிகள் 80 சதவீதம் முடிவடைந்ததாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இன்று அந்த பேருந்து நிலைய பணிகளை அவர் ஆய்வு நடத்திய போது இதை தெரிவித்தார்.
இந்த பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்துவிட்டால் பெங்களூர் செல்லும் ஐடி ஊழியர்களுக்கு உதவியாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

தென்மாவட்ட மக்களின் வசதிக்காக கிளாம்பாக்கம் பேருந்து முனையம் கட்டப்பட்டுள்ளது. மற்போது மேற்கு மாவட்டங்களுக்கும், பெங்களூரு செல்லும் மக்களுக்காகவும் குத்தம்பாக்கம் கிராமத்தில் பேருந்து முனையம் கட்டப்பட்டுள்ளது.
சுமார் 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை அருகே உள்ள குத்தம்பாக்கம் கிராமத்தில் புறநகர் பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருமழிசை, குத்தம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என தமிழக அரசு, கடந்த 2019ஆம் ஆண்டு அறிவித்தது. மேற்கு மாவட்டங்கள், கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இருந்து வரும் பேருந்துகளுக்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. மாநில வீட்டு வசதி வாரியத்தின் திருமழிசை துணை நகர திட்டத்தில் இருந்து 24.8 ஏக்கர் நிலம் பெறப்பட்டது.

இந்த நிலத்தில் 336 கோடி ரூபாயில் ஐந்து லட்சம் சதுர அடியில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகள், கடந்த 2021- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கினர். குத்தம்பாக்கம் நிலையத்தில் புறநகர் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் மாநகர பேருந்துகள் என ஒரே நேரத்தில் 130 பேருந்துகளை நிறுத்தும் வசதி உள்ளது.
பேருந்து நிலையத்தின் கீழ் தளத்தில் 1,680 இருசக்கர வாகனங்கள், 235 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் பார்க்கிங் வசதியும் வடிவமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. பயணியர் பயன்படுத்தும் வகையில் நான்கு லிப்டுகள், நகரும் படிக்கட்டுகள் ஆகியவையும் அமைக்கப்படவுள்ளன.
வைஃபை அனைத்து வசதிகளுடன் குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. பெங்களூரு செல்லும் ஐ.டி. ஊழியர்களுக்கு இந்த பேருந்து நிலையம் பேருதவியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குத்தம்பாக்கம் பேருந்து நிலைய பணிகளை அமைச்சர் சேகர்பாபு இன்று பார்வையிட்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்த போது, குத்தம்பாக்கம் பேருந்து நிலைய பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துவிட்டன. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இந்த பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றார். இந்த மாத தொடக்கத்தில் குத்தம்பாக்கம் குறித்து பேசிய சேகர்பாபு, இந்த ஆண்டு இறுதியில் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications