அன்புமணிக்கு ஜீரோ மார்க்.. அப்பா அம்மாவையே மதிக்காத.. போட்டு தாக்கிய சேகர் பாபு
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சமீபகாலமாக ராமதாஸ், அவரின் மகன் அன்புமணி இடையே ஏற்பட்டு வரும் மோதல் காரணமாக கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. அன்புமணி பாஜகவுடன் நெருக்கமாகவும், திமுக மீது தொடர்ந்து விமர்சனமும் வைத்து வருகிறார். அவருக்கு பதில் சொல்லியுள்ள அமைச்சர் சேகர் பாபு அன்புமணிக்கு ஜீரோ மார்க் என்று கூறியதுடன், அவரை கடுமையாக விமர்சித்து தள்ளியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, "கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பணிகள் முடிக்காமல் திறக்கவில்லை. திறந்த பிறகு கூடுதல் வசதிகள் செய்துத்தரப்பட்டன. சில ஊடகங்கள் தான் அதை விமர்சித்தன. சில ஊடகங்கள் அதை உலகத்தரத்தில் இருப்பதாக பாராட்டின. எந்த குறையும் இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் தான் பணியாற்றி வருகிறோம்.

மழை முன்னெச்சரிக்கை பணி
பண்டிகை காலங்களில் ராயபுரத்தில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அந்தப் பேருந்தை இரண்டாக பிரித்து, தீவுத்திடலில் ஒரு பகுதியாக பிரித்துள்ளோம். இதன்மூலம் போக்குவரத்து நெரிசல் குறைந்து, பயணிகள் எளிதாக பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.800 கோடி நிதியில் பிராட்வே பேருந்து நிலையம் பிரம்மாண்டமாக அமைக்கப்படவுள்ளது.
வட சென்னையில் ஏற்கனவே நடைபெற்று வரும் கணேசபுரம், ஆர்கேநகர் பாலம் பணிகளையும் ஆய்வு செய்துள்ளோம். முதலமைச்சர் கண்காணிப்பில் அந்தப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. போர்கால அடிப்படையில் பருவமழையை சந்திக்க தயாராக உள்ளோம். உணவு, மருத்துவம் உள்ளிட்ட மக்களின் தேவைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் ஆய்வு செய்துள்ளோம்.
தேர்தல் வாக்குறுதி
சென்னை பெருநகர மாநகராட்சி மேயர், அதிகாரிகள் பலகட்டங்களாக ஆய்வு செய்து பட்டியல் எடுத்துள்ளனர். கடந்த முறை பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில், இந்தமுறை பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த மாதம் 22 ஆம் தேதி முதலமைச்சர் தலைமையில் மழை வெள்ள தடுப்புப் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறோம்.
தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக நிதியமைச்சர் விளக்கமளித்துவிட்டார். வாக்குறுதிகளுடன் மக்களுக்கு தேவையான பல திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளோம். தேர்தல் அறிக்கையில் வந்ததை விட 50க்கும் மேற்பட்ட திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். இதன்மூலம் ஒன்றியத்திலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்ற முதலமைச்சர் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கிறார். அவரின் பணிக்கு உதவியாக இருப்பதுதான் ஒரு நல்ல அரசியல் கட்சிக்கு தகுதி.
அட்டாக் அன்புமணி
எந்த தகுதியும் இல்லாத அவர் கூறும் புகார்களை கேட்பது ஏற்படையதல்ல. அன்புமணிக்கு மதிப்பெண் கொடுக்க வேண்டுமென்றால் ஜீரோ மதிப்பெண் தான் கொடுக்க வேண்டும். தூங்குவோரை எழுப்பிவிடலாம். தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது. இந்த உலகத்திற்கு வர யார் காரணமாக இருந்தார்களோ அவர்களை மதிக்க தெரியாதவர்களின் மதிப்பெண்ணை எல்லாம் நாங்கள் மதிக்க மாட்டோம்." என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications