உதயநிதிதான் அடுத்த வாரிசா.. கனிமொழிக்கு முக்கியத்துவம் இல்லாம போச்சே.. செல்லூர் ராஜு கவலை!
கனிமொழி குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
சென்னை: எரியிற தீயில் இன்னும் எண்ணை ஊற்றி கனிமொழியை கடுப்பேத்தி உள்ளார் அமைச்சர் செல்லூர் ராஜூ.
கருணாநிதி இறந்ததில் இருந்தே கனிமொழிக்கு கட்சியில் முக்கியத்துவம் தரப்படுவதில்லை என்று கூறப்பட்டு வருகிறது.
கருணாநிதி மகள் என்று இல்லாவிட்டாலும், ஸ்டாலினின் தங்கை என்று இல்லாவிட்டாலும், ஒரு சீனியர், மாநிலங்களவை உறுப்பினர், மகளிரணி செயலாளர்.. கவிஞர்... என்ற முறையிலாவது அவருக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று திமுக ஆதரவாளர்கள் சிலர் பொருமி வருகிறார்கள்.

சபரீசன்
கனிமொழியை ஸ்டாலின் பின்னுக்கு தள்ளி இருக்கிறாரோ இல்லையோ, உதயநிதியை முன்னிறுத்தப்பட்டு வருகிறார் என்றும் சொல்லப்பட்டும் வருகிறது. இதற்கு நடுவில் மருமகன் சபரீசன் பெயரும் அடிபடுகிறது.

தவிக்க போகிறார்
இந்த நிலையில்தான் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியின்போது சொன்னதாவது "ஸ்டாலின் போகிற போக்கை பார்த்தால் கூடிய சீக்கிரம் தூக்கமில்லாமல் மன உளைச்சலில் தவிக்க போகிறார் என்பது மட்டும் தெரிகிறது.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதியை தனது வாரிசாக ஸ்டாலின் உருவாக்கிவிட்டார். ஆனால் கனிமொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. அதிமுக-வை அழிக்க ஒரு ஸ்டாலின் இல்லை... 100 ஸ்டாலின்கள் வந்தாலும் முடியாது. ஏன் அவர் மகன் உதயநிதி ஸ்டாலினும், அவர் பேரனும் வந்தால் கூட அதிமுக-வை அழிக்க முடியாது.

மகளிரணி
குடும்ப அரசியலை ஊக்குவிக்கும் திமுக-வை மக்கள் என்னாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்'" என்றார். ஏற்கனவே கடுப்பில் உள்ள திமுக மகளிரணி, அமைச்சரின் கனிமொழி குறித்த இந்த பேச்சால் மேலும் கடுப்பாகி உள்ளது.
-
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications