தமிழகத்தில் பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகும்.. அமைச்சர் செங்கோட்டையன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவத் தொடங்கிய நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன.

Minister Sengottaiyan says about school opening

அப்போது ஓரிரு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தேர்வும் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் ஆங்காங்கே ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சில பள்ளிகள் நடப்பு கல்வியாண்டுக்கான கட்டணத்தை செலுத்துமாறு பெற்றோரை நிர்பந்திப்பதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

அது போல் பள்ளிகள் திறக்காவிட்டாலும் ஆன்லைன் வகுப்புகளை காரணம் காட்டி கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக வழக்கு ஒரு பக்கம் நடந்து வருகிறது. இந்த நிலையில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் முடிவாகும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது.

ஆனால் தற்போது 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவை வெளியிடுவதில் சிக்கல் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகும்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஜூலை முதல் வாரத்தில் வெளியாகும் என திட்டமிட்டிருந்த நிலையில் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவை வெளியிடுவதில் சிக்கல் உள்ளது. முதல்வரிடம் ஆலோசனை செய்த பிறகே பிளஸ் 2 தேர்வு முடிவு குறித்து அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+