உலமாக்கள் ஸ்கூட்டர் வாங்க ரூ.25,000 மானியம்! 1500 பேர் தமிழகத்திலிருந்து ஹஜ் பயணம் -அமைச்சர் மஸ்தான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓய்வுபெற்ற உலமாக்கள் ஸ்கூட்டி வாங்குவதற்கு சிறப்பு திட்டங்களில் இருந்து ரூ.25,000 மானியம் வழங்கப்படுவதாக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

மேலும், ஓய்வூதியம் பெற்று வந்த உலமாக்கள் மரணம் அடைந்துவிட்டால் அவர்களது மனைவிகளுக்கு அந்த ஓய்வூதியத்தை வழங்க இப்போது நடவடிக்கை எடுக்கப்பம் கூறினார்.

தமிழகத்தில் உலமாக்கள் நல வாரியத்தில் 10,588 பேர் இருப்பதாகவும் அவர்களுக்கு இலவச மிதிவண்டி கொடுப்பதாகவும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

ஹஜ் பயணம்

ஹஜ் பயணம்

தமிழகத்திலிருந்து இந்தாண்டு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வோருக்கு ஆங்காங்கு பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், தமிழகத்தை சேர்ந்த 1,500 பேர் இந்தாண்டு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.

கொச்சினில் விமானம்

கொச்சினில் விமானம்

மேலும், இந்தாண்டு சென்னையிலிருந்து சவுதி அரேபியாவின் ஜித்தா நகருக்கு விமானங்கள் இயக்கப்படாததால் கொச்சின் சென்று, தமிழக ஹஜ் பயணிகள் அங்கிருந்து மக்காவுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளதாக கூறினார். இதனிடையே தமிழக ஹஜ் பயணிகள் கொச்சினில் தங்குவதற்கான செலவினங்களை தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும் என்ற புதிய தகவலை வெளியிட்டார்.

ஸ்கூட்டிக்கு மானியம்

ஸ்கூட்டிக்கு மானியம்

அமைச்சர் செஞ்சி மஸ்தானின் இந்த அறிவிப்பிற்கு இஸ்லாமிய மக்களிடையே பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. மேலும், ஓய்வுபெற்ற உலமாக்கள் ஸ்கூட்டி வாங்குவதற்கு சிறப்பு திட்டங்களில் இருந்து ரூ.25,000 மானியம் வழங்கப்படுவதாகவும் தமிழகத்தில் உலமாக்கள் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்துள்ள 10,588 நபர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்குவதாகவும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.

உலமாக்கள்

உலமாக்கள்

ஓய்வூதியம் பெற்று வந்த உலமாக்கள் மரணம் அடைந்துவிட்டால் அவர்களது மனைவிகளுக்கு அந்த ஓய்வூதியத்தை வழங்க இப்போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்த திட்டத்தை விரைவில் தொடங்க முதலமைச்சருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+