அண்ணாமலைக்கு வேலையில்லை.. மின் ஊழியர்கள் “ஏதாவது” வாங்கினால் நடவடிக்கை.. அமைச்சர் செந்தில் பாலாஜி..!
சென்னை : பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேலையில்லாமல் தன் இருப்பை காட்டி கொள்ள பேசி வருகிறார் எனவும், வேலையில்லாதவர்களை பற்றியோ ஆதாரம் இல்லாமல் குற்றம் சுமத்துபவர்கள் பற்றியோ பேச வேண்டாம் என மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "முதல்வர் தொடர்ந்து மின் வாரிய துறையுடன் ஆய்வு கூட்டங்களை நடத்தி , வட்டி குறைப்பு உள்ளிட்ட சீர்திருத்தங்களால் தமிழக மின்சார வாரியத்துக்கு 2200 கோடி அளவு சேமிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. என்றார்.

மின் தேவை அதிகரிப்பு
மேலும், "மின்வாரியத்தில் மேலும் செலவை குறைக்க கூடுதல் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டத்தில் 98157 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு இன்னும் இரு தினங்களில் மின் இணைப்பு அளிக்கப்பட்டுவிடும். 8905 புதிய மின்மாற்றிகள் அமைக்கும் பணிகள் 100 விழுக்காடு நிறைவடைந்துள்ளது. கோடைகாலம் விரைவில் துவங்க உள்ள நிலையில் மின் தேவை அதிகரித்துள்ளது . இதனால் மின் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

செப்டம்பரில் சோதனை ஓட்டம்
நாளொன்றுக்கு 72000 டன் நிலக்கரி மின் உற்பத்திக்கு தேவைப்படுகிறது மத்திய அரசு 50000 டன் நிலக்கரி மட்டுமே தரும் நிலையில் , முதற்கட்டமாக 4 லட்சத்து 80 ஆயிரம் டன் நிலக்கரி இறக்குமதி செய்வதாக டெண்டர் விடப்பட்டு உள்ளது. நிலக்கரி விலை சர்வதேச அளவில் அதிகரித்துள்ள நிலையில் , வெளிப்படையான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. கடந்த 2006 - 11 ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது தொடங்கப்பட்ட வடசென்னை அனல் மின் நிலைய திட்டபணிகள் , இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் நிறைவடைந்து உற்பத்தியை தொடங்கும் எனவும் , செப்டம்பரில் சோதனை ஓட்டம் நடைபெறும்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேலையில்லாமல் தன் இருப்பை காட்டி கொள்ள பேசி வருகிறார். வேலையில்லாதவர்களை பற்றியோ ஆதாரம் இல்லாமல் குற்றம்சுமத்துபவர்கள் பற்றியோ பேச வேண்டாம், மேலும் சிலர் சமூக வலைதளங்கள் மற்றும் வார நாளிதழ்கள் மூலம் தங்கள் இருப்பை காட்டி கொள்ள ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டுகின்றனர். அதிகப்பட்சமாக இன்று 17000 மெகா வாட் அளவிற்கு மின் நுகர்வு இருந்தது. வரும் கோடைகாலத்தை சமாளிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது

துறைரீதியான நடவடிக்கை
ஒரு பொதுவான நல்ல நோக்கிக்கிற்காக நடைபெறும் வேலை நிறுத்தம் நடைபெறுவதாகவும் தமிழக மின்சாரத்துறையை பொறுத்தவரை வேலை நிறுத்தத்தால் மின் உற்பத்தி எதுவும் பாதிக்கவில்லை. சூரிய மின் சக்தி நிலையங்களை உருவாக்க அரசு நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பழுது நீக்க செல்லும் மின் வாரிய ஊழியர்கள் நுகர்வோரிடத்தில் எதையும் கேட்க கூடாது என மின்வாரிய ஊழியர்களுக்கு அறிவுறுத்தபட்டுள்ளது. மீறினால் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்." என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.












Click it and Unblock the Notifications