செந்தில் பாலாஜி மூவ்! இன்று முதல் டிஜிட்டல் முறை மது விற்பனை.. டாஸ்மாக் கடைகளில் பெரிய மாற்றம்!
சென்னை: இன்று முதல் டிஜிட்டல் முறையில் மது விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் பல துறைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் டாஸ்மாக் துறை டிஜிட்டல் மயமாக்கப்படுகிறது.
முதல் கட்டமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 220 டாஸ்மாக் கடைகளில், இன்று முதல் டிஜிட்டல் முறையில் மதுபானங்களுக்கு ரசீது வழங்கப்படும். அதேபோல் QR code மூலம் பணம் செலுத்தும் திட்டம் நடைமுறைக்கு வருகிறது. மதுபாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக ₹10 முதல் ₹40 வரை வசூலிக்கப்படுவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி.. மின்சார மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சரான கடந்த சில வாரங்களில் டாஸ்மாக் துறையில் முக்கியமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். பல நாட்களாக டாஸ்மாக்கில் இருந்து வந்த பிரச்சனை ஒன்றை தீர்க்கும் வகையில் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதன்படி டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்கு Bill வழங்கும் நடைமுறை. சோதனை அடிப்படையில் முதற்கட்டமாக ராணிப்பேட்டையில் உள்ள 7 கடைகளில் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டது. டாஸ்மாக் கடைகளின் செயல்பாடுகளை கணினிமயமாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த பில்லிங் முறை செயல்படுத்தப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளில் உள்ள விற்பனையாளர்கள் கையடக்க ஸ்கேனர் மூலம் ஒவ்வொரு பாட்டிலிலும் உள்ள கலால் வரியுடன் கூடிய லேபிள்களை ஸ்கேன் செய்து பில் ரசீதுகளை வாடிக்கையாளரிடம் வழங்குகின்றனர்.
மதுபாட்டில்களை ஸ்கேன் செய்தால், அந்த பாட்டில் எங்கே வாங்கப்பட்டது, எந்த தேதியில் வாங்கப்பட்டது, இது எந்த பேட்ச்சை சேர்ந்தது, மதுபான ஆலையில் இருந்து எப்போது வெளியே கொண்டு வரப்பட்டது போன்ற பல்வேறு விவரங்களை தெரிந்து கொள்ள முடியும்.
டிஜிட்டல்: இப்படிப்பட்ட நிலையில்தான் டாஸ்மாக் துறை டிஜிட்டல் மயமாக்கப்படுகிறது. முதல் கட்டமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 220 டாஸ்மாக் கடைகளில், இன்று முதல் டிஜிட்டல் முறையில் மதுபானங்களுக்கு ரசீது வழங்கப்படும். அதாவது மது வாங்கினால் அதை ஸ்கேன் செய்து பில் போடுவார்கள்.
அதேபோல் QR code மூலம் பணம் செலுத்தும் திட்டம் நடைமுறைக்கு வருகிறது. அதாவது கேஷ் கொடுக்காமல்.. ஸ்கேன் செய்து பணம் கொடுக்கலாம். இதனால் முறைகேடுகள் தடுக்கப்படும். முக்கியமாக மதுபாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக ₹10 முதல் ₹40 வரை வசூலிக்கப்படுவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதனால் இனிமேல் டாஸ்மாக்கில் என்ன விலையோ அதற்கு உரிய கட்டணத்தை கொடுத்தால் போதும். எந்த விதமான முறைகேடுகளும் இனி நடக்காது.
டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த நிலையில் இதனை தடுக்க தமிழக அரசு எச்சரித்து இருந்தது. இந்த நிலையில், மதுக்கடைகளை கணினிமயமாக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. உற்பத்தி முதல் விற்பனை வரை அனைத்து நிலைகளை கண்காணிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் ஒரு கட்டமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் அரசின் டாஸ்மாக் மூலமாக மது விற்பனை நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் 4,829 கடைகள் செயல்பட்டு வருகின்றன. விரைவில் இந்த மதுக்கடைகள் அனைத்திலும் இதே முறை நடைமுறைக்கு வரும்.
-
டாஸ்மாக்: பாட்டிலுக்கு ரூ.10 எக்ஸ்ட்ரா! பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி உண்மைகள்! விஜய் காதுக்கு வந்த செய்தி -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications