"ஈடி விசாரிக்கும்.." வாயை விட்ட அண்ணாமலை.. "வெட்ட வெளிச்சமாகிடுச்சி பாருங்க" செந்தில் பாலாஜி சுளீர்!
சென்னை: அண்ணாமலை என்ன அமலாக்கத்துறை இயக்குநரா? அல்லது அவர் இணை இயக்குநரா? அவர் எப்படி அமலாக்கத்துறை பற்றி பேச முடியும் என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பி உள்ளார்.
இன்று பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் பேசிய போது அவரிடம் செய்தியாளர் ஒருவர்.. மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்குமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
போக்குவரத்து துறை அமைச்சராக அதிமுக ஆட்சி காலத்தில் முறைகேடு செய்ததாக செந்தில் பாலாஜி மீது உள்ள வழக்கில் அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கப்படுமா என்று அண்ணாமலையிடம் செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

அண்ணாமலை
இதற்கு பதில் அளித்த அண்ணாமலை, வெயிட் பண்ணுங்கண்ணா அமலாக்கத்துறை கொஞ்சம் பிஸியா இருக்காங்க. முடிச்சிட்டு இங்கதான் வருவாங்க. விரைவில் அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்வார்கள், என்று கூறினார். இந்த நிலையில் அண்ணாமலையின் பேச்சுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்துள்ளார். அதில், அண்ணாமலை என்ன அமலாக்கத்துறை இயக்குநரா? அல்லது அவர் இணை இயக்குநரா?

அமலாக்கத்துறை
ஒன்றிய அரசில் அவர் என்ன நிதி அமைச்சராக இருக்கிறாரா? அரவக்குறிச்சியில் தோல்வி அடைந்து ஓடினாரே.. அவர் தானே? என்ன பொறுப்பில் இருக்கிறார் அவர்? அந்த பக்கமே அவரை பார்க்க முடியவில்லையே? அமலாக்கத்துறை பற்றி அண்ணாமலை எப்படி பேச முடியும்?. தன்னிச்சையாக செயல்பட கூடிய அமலாக்கத்துறை பற்றி அண்ணாமலை எப்படி பேசலாம். அமலாக்கத்துறையை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவது வெட்ட வெளிச்சம் ஆகிறது.

செந்தில் பாலாஜி
ஆவணங்கள் இருந்தால் அண்ணாமலை கொடுக்கட்டும், பதில் சொல்கிறேன். மின்துறை மீதான அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு ஏற்க கூடியதாக இல்லை. மத்திய அரசு எவ்வளவு டாலருக்கு நிலக்கரி இறக்குமதி செய்ய கூறியுள்ளது என தெரிவிக்க வேண்டும். இதை பற்றித்தான் செய்தி போட வேண்டும். அமலாக்கத்துறை தனி பாடி. ஆனால் பாஜகவின் மாநில தலைவர் இவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எப்படி சொல்ல முடியும்? அவர்கள்தான் அமலாக்கத்துறையை கட்டப்படுத்துகிறார்களா?

மூளை இல்லை
அவருக்கு மூளை இருக்கிறதா? வேலை வெட்டி இல்லாதவர்களிடம் பேச முடியாது. எனக்கும் வேலை இருக்கிறது. உங்களுக்கும் வேலை இருக்கிறது. அவருக்கு வேலை இருக்கிறதா? மக்கள் நலனுக்காக பேச கூடிய தலைவர்களை பற்றி அண்ணாமலையின் குற்றச்சாட்டுகள் எதுவும் ஏற்புடையது அல்ல. அவரிடம் ஆவணம் இருந்தால் பேச சொல்லுங்கள். அண்ணாமலை வெற்று விளம்பரத்திற்காக பேச வேண்டாம். அமலாக்கத்துறையை ஒரு அரசியல் கட்சி எப்படி பயன்படுத்துகிறது அண்ணாமலை பேச்சில் தெரிகிறது, என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications