செந்தில் பாலாஜி கைது செய்ய போறோம்னு அமலாக்கத் துறையினர் முதலில் யாரிடம் சொன்னார்கள் தெரியுமா?
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி வருவதற்கு முன்பு நடந்தது என்ன தெரியுமா? அமலாக்கத் துறை அதிகாரிகள் சொன்னது என்ன?
தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அவருடைய தம்பி அசோக் வீட்டில் நேற்றைய தினம் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்திலும் சோதனை நடந்தது.

இந்த நிலையில் 17 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடந்து வந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டிற்கு வந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரை கைது செய்வதாகவும் தங்களுடன் நுங்கம்பாக்கம் அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு வருமாறும் அழைத்தனர்.
ஆனால் அதற்குள் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனே ஐயோ, என நெஞ்சை பிடித்துக் கொண்டு கதறினார். பிறகு அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு, ரகுபதி, கே.என். நேரு உள்ளிட்டோர் நேரில் போய் சந்தித்தனர்.
செந்தில் பாலாஜியின் காது பகுதியில் வீக்கம் இருப்பதாகவும் அவர் சுயநினைவில்லாமல் இருக்கிறார் என்றும் நான்கைந்து முறை அழைத்தும் அவர் கண்களை திறக்கவில்லை என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார். செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் அங்கிருந்தபடியே அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று நடந்தது என்ன என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்திற்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் வந்தனர்.
அவர்கள் அங்கு சோதனை நடத்திவிட்டு அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவரை கைது செய்வதாகவும் நுங்கம்பாக்கம் அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு அழைத்து செல்ல வேண்டும் என்றும் தெரிவித்தனர். இந்த தகவலை முதலில் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்கிடம்தான் அமலாக்கத் துறையினர் தெரிவித்தனராம். இதன் பிறகுதான் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாம்.
-
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications