பொங்கல் லீவுக்கு ஊருக்குப் போறீங்களா?.. நோட் பண்ணுங்க.. அமைச்சரின் சூப்பர் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லும் வகையில் 14 ஆயிரத்து 104 சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் வாழ்வியல், கலாசாரம், பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் பொங்கல் பண்டிகை காலம் காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை என்றாலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகம் தொற்றிக் கொள்ளும். பச்சரிசியில் பொங்கல், கரும்பு, புத்தாடை, நீண்ட நாள் விடுமுறை, வீர விளையாட்டுகள் என ஊரே களைகட்டி இருக்கும்.

pongal special bus

பொங்கல் பண்டிகைக்கு நீண்டநாள் விடுமுறை கிடைப்பதால் எந்த ஊரில் இருந்தாலும் பொங்கல் பண்டிகை என்றால் பொதுமக்கள் ஏராளமானோர் சொந்த ஊருக்குச் செல்வது வழக்கம். சென்னையில் கல்வி, வேலைக்காக தங்கியிருக்கும் பலரும் பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்வர்.

2025 புத்தாண்டில் பொங்கல் பண்டிகை ஜனவரி 14 ஆம் தேதி, செவ்வாய்க்கிழமையன்று கொண்டாடப்பட உள்ளது. அதற்கடுத்த நாள் ஜனவரி 15 ஆம் தேதி திருவள்ளுவர் நாள், அதனைத் தொடர்ந்து 15 ஆம் தேதி திருவள்ளுவர் நாள், ஜனவரி 16 ஆம் தேதி உழவர் தினம் கொண்டப்படுகிறது. ஜனவரி 14 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை தமிழக அரசு சார்பில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த அறிவிப்பால் சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்கள் குஷியாகியுள்ளனர். பொதுமக்கள் பேருந்துகள் மற்றும் ரயில்களில் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொள்வதைத் தவிர்க்கும் வகையில் தொடர் விடுமுறை நாட்கள், தீபாவளி, பொங்கல், ஆயூத பூஜை போன்ற பண்டிகைக் காலங்களில் சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இயக்கத்தை அறிவிப்பது வழக்கம்.

அந்த வகையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லும் வகையில் 14 ஆயிரத்து 104 சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் சென்னையில் போக்குவரத்து துறை அதிகாரிகள், காவல் துறையுடன் இணைந்து இதுதொடர்பாக இன்று ஆலோசனை மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து, அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 10, 11, 12, 13 ஆகிய தேதிகளில் 14,104 பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது

கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் ஆகிய 3 இடங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஜனவரி 10, 11, 12, 13 ஆகிய தேதிகளில் வழக்கமாக இயக்கப்படும் 8,368 பேருந்துகளுடன் சேர்த்து கூடுதலாக 5,736 பேருந்துகள் இயக்கப்படும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இதுவரை 1.73 லட்சம் பேர் சிறப்பு பேருந்துகளை முன்பதிவு செய்துள்ளனர்.

சொந்த ஊர் செல்லும் மக்கள் கிளாம்பாக்கம், கோயம்பேடு பேருந்து நிலையங்களில் மட்டுமல்லாமல் இணையதளம் மூமலமாகவும் பேருந்துகளை முன்பதிவு செய்யலாம். பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர் சென்னை திரும்பும் மக்களின் வசிக்காக ஜனவரி 15, 16, 17, 18, 19 ஆம் தேதி வரை மொத்தம் 15,800 பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், பொங்கல் விழாவுக்காக பொதுமக்கள் சொந்த ஊருக்குச் சென்று வரும் வகையில் 22,676 சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல, ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் இரண்டு நாள்கள் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மதுரவாயல், கோயம்பேடு சாலைகளில் பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றக் கூடாது. ஆம்னி பேருந்துகளில் கட்டணம் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+