“புலி வாலை பிடிச்சிட்டீங்க.. அது விடாது”.. சட்டசபையில் ஜிகே மணியை ரவுண்டு கட்டிய அமைச்சர் சிவசங்கர்!
சென்னை: வன்னியர் சமூகத்திற்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் பாமக - திமுக இடையே காரசார விவாதம் ஏற்பட்டது. அமைச்சர் சிவசங்கர், ஜிகே மணிக்கு காட்டமாக பதில் கொடுத்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பள்ளிக்கல்வி துறை மானியக்கோரிக்கை விவாதத்தில் பேசிய பாமக சட்டமன்றக் குழுத் தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சமூகத்திற்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பேசினார். இதற்கு அமைச்சர்கள், அரசியல் ரீதியான கருத்து என அமைச்சர்கள் ரகுபதி, எஸ்.எஸ்.சிவங்கர் ஆகியோர் பதில் அளித்த நிலையிலும் விவாதம் தொடர்ந்ததால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

அப்போது “இப்போது நீங்கள் எந்தக் கூட்டணியில் இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே, அந்தக் கூட்டணிக் கட்சியோடு பேசி, நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அதற்குப்பிறகுதான் இதை அமல்படுத்த முடியும். இந்தப் பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வு காண வேண்டுமென்று சொன்னால், சாதிவாரியான கணக்கெடுப்பு, மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஒன்றிய அரசால் விரைந்து எடுக்கப்பட வேண்டும். அதற்காக இந்தச் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே ஒரு தீர்மானத்தைக் கொண்டுவரலாம் என்று நாங்கள் முடிவு செய்திருக்கிறோம். அதற்கு ஜிகே மணி ஆதரவு தரவேண்டும்” எனக் கூறினார்.
சிவசங்கர் காட்டமான பதிலடி: முதல்வரின் பதிலை தொடர்ந்து ஜி.கே.மணி பேச முயன்ற நிலையில், சபாநாயகர் அனுமதி மறுத்ததால் பாமக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். பாமக சட்டமன்றக் குழுத் தலைவர் ஜி.கே.மணிக்கு பதில் அளித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசுகையில், “முதல்வர் அவர்கள் உங்களுக்கு தெளிவாக பதில் சொன்ன பிறகும் மீண்டும் மீண்டும் நீங்கள் சொல்வது திராவிட முன்னேற்றக் கழகம் இதற்கு எதிராக இருப்பது போல காட்டுவதற்காக என்றுதான் நான் சொல்ல விரும்புகிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகம் வன்னியர் சமூகத்திற்கு என்ன செய்திருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. முன்னாள் முதல்வர் கருணாநிதி இருந்தபோதுதான் அந்த 20 சதவிகித இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. 20 சதவிகித இடஒதுக்கீடு கொடுத்த கருணாநிதி அவர்களை அந்த சமூகத்திற்கு எதிரானவர் போல் சித்தரிப்பதையே பா.ம.க தொடர்ந்து செய்து வருகிறது. ஆனால் இந்த இடஒதுக்கீடு போராட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்தபோது காக்கைக் குருவிபோல் சுட்டுக் கொன்றது யார் என்பதை மறந்துவிட்டு அவர்களோடு கூட்டணி அமைத்தீர்கள்.
அதிமுகவையும் கைவிட்டுட்டீங்க: இப்போது கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, தேர்தல் நாள் அறிவிக்கின்ற அன்று உங்களுக்குள் பேசிக்கொண்டு அந்த 10.5 சதவிகித இடஒதுக்கீட்டை அறிவிக்கை செய்து நீங்கள் உங்கள் கூட்டணியை அறிவித்தீர்கள். அந்த 10.5 சதவிகிதம் அரைவேக்காட்டுத்தனமாக அவசர கோலத்தில் அள்ளித் தெளிக்கப்பட்டது என்பது உங்களுக்கும் தெரியும். அது நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. நிராகரிக்கப்பட்ட பிறகும் நீங்கள் அவர்கள் செய்ததுபோல சொல்லித்தான் நீங்கள் தேர்தலை சந்தித்தீர்கள். ஆனால், 20 சதவிகிதம் இடஒதுக்கீடு கொடுத்த திராவிட முன்னேற்றக் கழகத்தையும் எதிரியாகக் காட்டினீர்கள். இந்த நாடாளுமன்றத் தேர்தலிலே 10.5 சதவிகிதம் கொடுத்த அஇஅதிமுகவையும் கைவிட்டுவிட்டீர்கள்.
எப்படி இப்படி?: எது சமூக நீதிக்கு எதிராக இருக்கிறதோ அந்த பாரதிய ஜனதா கட்சியுடன் கைகோர்த்து இருக்கிறீர்கள். சமூக நீதியை ஒட்டுமொத்தமாக நிராகரிக்கின்ற பா.ஜ.கவை இன்றைக்கும் தமிழகத்தில் தூக்கிப் பிடிக்கிறவர்கள் நீங்களாகத்தான் இருக்கிறீர்கள். எப்படி ஒரே நேரத்தில் இத்தனை விதமாக பேச முடிகிறது என்பது விந்தையாக இருக்கிறது. இப்போது நடைபெறப் போகிற இடைத் தேர்தல் நேரத்தில் அங்கு இருக்கிற மக்களுக்கு நீங்கள் ஏதோ ஒரு செய்தியை சொல்வதாக நினைத்துக் கொண்டு சட்டமன்றத்தில் பதிவு செய்வது என்பது ஒரு தவறான முன்னுதாரணம். இன்னும் சொல்லப்போனால், பீகாரிலே உள்ஒதுக்கீடுதான் வழங்கப்படுகிறது. அதுதான் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது.
மறக்கக்கூடாது: நீங்கள் இங்கே பேசும்போது மேம்போக்காக சொல்கிறீர்கள், மாநில அரசுக்கு உரிமை இருக்கிறது, இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டிருக்கிறது, அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீடு கொடுக்கப்பட்டிருக்கிறது என்று. அத்தனை உள்ஒதுக்கீட்டையும் கொடுத்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி என்பதை நீங்கள் மறக்கக் கூடாது.
சாதி வாரி கணக்கெடுப்பு.. சட்ட சபையில் காரசார விவாதம்.. வெளிநடப்புக்கு பின் ஜிகே மணி பரபர பேட்டி
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் இல்லாது இருந்த கொங்கு வேளாள கவுண்டரை பிற்படுத்தப்பட்டவர்களாக சேர்த்தவரும் கருணாநிதி அவர்கள்தான்; மிகப் பிற்படுத்தப்பட்ட சமுதாயம் என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தி அதிலே வன்னியர்களை சேர்த்தவரும் கருணாநிதி அவர்கள்தான்; இஸ்லாமியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கொடுத்தவரும் கருணாநிதி தான்; அருந்ததியினர்களுக்கு உள்ஒதுக்கீடு கொடுத்தவரும் கருணாநிதி அவர்கள்தான்.
இது அழகல்ல: இன்றைக்கும் நம்முடைய முதல்வர் அவர்கள் எத்தனை முறை அமைச்சர்களை அழைத்து, உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களை அழைத்து, இன்னும் சொல்லப்போனால், உச்சநீதிமன்றத்தின் வழக்கறிஞர்களையும் அழைத்து, இந்த இடஒதுக்கீடு குறித்து ஆலோசனை செய்திருக்கிறார் என்பதை நீங்களும் அறிவீர்கள், உங்கள் கட்சித் தலைவரும் அறிவார். ஆனாலும் அவற்றையெல்லாம் மறைத்துவிட்டு மீண்டும் மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தை குற்றஞ்சாட்டுவதைப் போல, பழியையெல்லாம் திமுக மீது சுமத்துவதுபோல் பேசுவது என்பது அவைக்கு அழகல்ல. உங்கள் அரசியல் அனுபவத்திற்கு அழகல்ல.
21 பேருக்கு மணிமண்டபம் அமைக்கின்றவர் நம்முடைய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள். அப்போது இறந்தவர்களின் குடும்பத்திற்கு உதவித் தொகை வழங்கியவர் கருணாநிதி அவர்கள். எல்லாவற்றையும் செய்தவர்கள் தலைவர் கலைஞர் அவர்களும், இன்றைய திராவிட மாடல் முதலமைச்சர் அவர்களும்தான். இன்னும் சொல்லப்போனால், அந்த 20 சதவிகித இருக்கின்ற காரணத்தால்தான், வட மாவட்டங்களில் இன்றைக்கு 10.5 சதவீதம் என்று நீங்கள் கேட்கின்ற சதவீதத்தைவிட கூடுதலாக வன்னியர் சமூகத்து மக்கள் தங்களுக்கான உரிமையைப் பெறுகிறார்கள். அத்தனை புள்ளிவிவரங்களும் உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன.
புலி வாலை பிடிச்சிட்டீங்க: இன்னும் சொல்லப்போனால், TNPSC வரைக்கும் புள்ளிவிவரம் எடுக்கப்பட்டதிலே, 10.5 சதவீதத்தைத் தாண்டிதான் வன்னியர்கள் இந்த 20 சதவீத இட ஒதுக்கீடு இருக்கின்ற காரணத்தால் பெறுகிறார்கள். நீங்கள் கேட்பது, அதனைக் குறைத்து கொடுப்பதற்காக வழியைத்தான் வகுத்துக் கொடுக்கும். இது வன்னியர் சமூகத்தில் இருக்கின்ற படித்த, மூத்த, பல நிபுணர்கள் உங்களுக்கு கருத்தைத் தெரிவித்திருக்கின்றார்கள். ஆனால், நீங்கள் புலி வாலை பிடித்து விட்டீர்கள். அந்த புலி வாலை பிடித்துக்கொண்டே போகிறீர்கள். புலியும் உங்களை விடாது. வாலையும் நீங்கள் விட முடியாது.” எனத் தெரிவித்துள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications