டக்.. டக்குன்னு அனுமதி! கடனுக்கு தமிழக அரசு கேரண்டி! தொழில்முனைவோர்களாக 16,746 இளைஞர்கள்! -அன்பரசன்
சென்னை: தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 20 மாதங்களில் மட்டும் 16,746 இளைஞர்கள் தொழில்முனைவோர்களாக உருவாகியுள்ளனர் என சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தாமோ அன்பரசன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தொழில் தொடங்கும் தொழில்முனைவோர்களுக்கு, தேவையான கடன் உத்தரவாதத்தினை தமிழக அரசே வழங்கும் வகையில், இந்தியாவிலேயே முதல் முறையாக முதல்வர் ஸ்டாலினால் ரூ. 100 கோடி நிதியில் "தமிழ்நாடு கடன் உத்திரவாத திட்டம்" துவக்கி வைக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
உலக தமிழ் வம்சாவளி மாநாட்டில் அமைச்சர் தாமோ அன்பரசன் பேசியதாவது;

MSME துறை
நமது நாட்டில் வேளாண் துறைக்கு அடுத்தப்படியாக அதிக வேலைவாய்ப்புகளை அளிக்கும் துறையாக MSME துறை விளங்குகிறது.பணமதிப்பிழப்பு, GST, கொரோனா ஆகியவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டு துவண்டு இருந்த MSME துறையை தன் சீரிய திட்டங்களால் தூக்கி நிறுத்திய பெருமை முதல்வர் ஸ்டாலினையே சாரும். இந்திய அளவில் தொழில் துவங்க உகந்த மாநிலங்களின் பட்டியலில் 14-வது இடத்திலிருந்த தமிழ்நாடு இன்று 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Start-up நிறுவனங்கள்
Start-up நிறுவனங்கள் தர வரிசை பட்டியலில் 5-வது நிலையிலிருந்து தமிழகம் இன்று 3-ம் நிலைக்கு முன்னேறியுள்ளது. தமிழகத்தில், 7 லட்சத்து 7 ஆயிரம் 681 பதிவு செய்யப்பட்ட MSME நிறுவனங்கள் இயங்குகின்றன. இதன் மூலம், 64 லட்சத்து 48 ஆரியம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனங்கள் 8 ஆயிரம் வகையான பொருட்களை உற்பத்தி செய்து MSME துறையில் இந்திய அளவில் தமிழகம் 3-ம் இடத்தில் உள்ளது.

14,651 விண்ணப்பங்கள்
தமிழக அரசு MSME தொழில்களுக்கு பல புதிய திட்டங்களை ஆட்சி பொறுப்பேற்றது முதல், தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. தொழில் முனைவோர்கள் தொழில் தொடங்குவதற்கான உரிமங்களை விரைந்து பெற கடந்த ஆண்டு Single Window Portal 2.0 திட்டம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் 40 அரசு துறைகள் வழங்கும் 142 வகையான சேவைகளை இணைய வழியில் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த இணைய தளம் மூலமாக 14,651 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 12,900 தொழில்முனைவோருக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

16,746 படித்த இளைஞர்கள்
சிறு, குறு - நடுத்தர தொழில்கள், வியாபார நிறுவனங்களின் வளர்ச்சிக்காக , தமிழக அரசின் MSME துறையின் மூலம் NEEDS - UYEGP - PMEGP ஆகிய 3 வகையான மானியத்துடன் கூடிய சுய தொழில் திட்டங்களை செயல்படுத்தப்படுகிறது.இந்த 3 வகையான திட்டங்களின் கீழ், ஆட்சி பொறுப்பேற்ற குறுகிய காலத்தில், ரூ.586 கோடி மானியத்துடன், ரூ. 2 ஆயிரத்து 343 கோடி வங்கி கடனுதவி வழங்கப்பட்டு, 16,746 படித்த இளைஞர்கள் தொழில்முனைவோர்களாக உருவாக்கப்பட்டு உள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடன் உத்திரவாத திட்டம்
தொழில் தொடங்கும் தொழில்முனைவோர்களுக்கு, தேவையான கடன் உத்தரவாதத்தினை தமிழக அரசே வழங்கும் வகையில், இந்தியாவிலேயே முதல் முறையாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் ரூ. 100 கோடி நிதியில் "தமிழ்நாடு கடன் உத்திரவாத திட்டம்" துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ரூ. 40 லட்சத்திற்கு குறைவான வங்கிக்கடனுக்கு 90% உத்திரவாதமும், ரூ. 2 கோடி வரையிலான கடன்களுக்கு 80 சதவீதம் உத்திரவாத்தினையும் தமிழக அரசு வழங்கும். இந்தியாவிலேயே 90% வரை கடன் உத்திரவாதம் வழங்க உள்ள ஓரே மாநிலம் தமிழ்நாடு தான் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications