மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு- தங்கம் அறிவிப்பு
சென்னை: மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்க் தென்னரசு அறிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலினின் உத்தரவுபடி தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு என்னவெல்லாம் கிடைக்கும் என்பதையும் பார்க்கலாம். வீடற்ற தொழிலாளர்களுக்கு கலைஞர் கனவு திட்டத்தின் கீ்ழ் வீடு கட்டித் தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலய பகுதிக்குள்பட்ட மாஞ்சோலை BBTC தேயிலை நிறுவனத்தின் செயல்பாடுகள் முடிவுற்றதால் அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் அனைத்து உதவிகளையும் செய்து தர தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் வாழ்வாதாரத்திற்கான அனைத்து உதவிகளும் அரசால் செய்யப்படும் என நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சரான தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். தேயிலை தோட்டத் தொழிலாளர்கள், பல்வேறு அரசியல் கட்சி மற்றும் பொது நல இயக்கஙகளைச் சார்ந்த பிரதிநிதிள் கோரிக்கைகளின் அடிப்படையில் பணியிழந்த தொழிலாளர்களுக்கு வீட்டு மனை மற்றும் வீடுகள், வாழ்வாதாரத்திற்கான உதவிகள் உள்ளிட்டவற்றை வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மாஞ்சோலையில் உள்ள BBTC தேயிலை நிறுவத்திறகு வழங்கப்பட்ட 99 ஆண்டு கால குத்தகை 11.02.2028 அன்று முடிவடைகிறது. இதை கருத்தில் கொண்டு மேற்படி நிறுவனம் மார்ச் 2024 ஆம் ஆண்டு தனது நிறுவனத்தில் பணிபுரியும் 559 தொழிலாளர்களுக்கான விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்து. அப்போதே அரசு சார்பில் நெல்லை ஆட்சியரால் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் தலைமையில் தொழிலாளர் நலத் துறை, வருவாய்த் துறை வனத்துறை அலுவலர்கள் அடங்கிய சிறப்புக் குழு உருவாக்கப்பட்டது.
மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்களின் உத்தரவுப்படி, மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் அறிவிப்பு#CMMKSTALIN | #TNDIPR | pic.twitter.com/glJeJf3KlR
— TN DIPR (@TNDIPRNEWS) July 28, 2024
அக்குழு தொழிலாளர்கள் மற்றும் அங்குள்ள தொழிற்சங்கப் பிரதிநிதிகளை நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தது. மேலும் அவர்கலை விருப்ப ஓய்வில் செல்ல நிறுவனம் கட்டாயப்படுத்தினால் தொழிலாளர் நலத் துறையில் புகார் அளிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டு தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களும் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் செப்டம்பர் மாதத்திற்குள் ஓய்வு பெறவுள்ள 23 தொழிலாளர்களைத் தவிர்த்து 536 தொழிலாளர்கள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அவர்களின் முழு சட்டப்பூர்வ பணப்பலன்கள் மற்றும் நிறுவனத்தால் விருப்ப ஓய்வுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும். கருணைத் தொகையில் 25 சதவீதம் ஆகியவற்றை பெற்றுக் கொண்டனர் என நிறுவனத்தின் சார்பில் தொழிலாளர் நலத்துறைக்கு அறிக்கை அளிக்கப்பட்டது.
மாஞ்சோலை தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மூலம் பெறப்பட்ட அறிக்கைகள், பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள் உள்ளிட்டவற்றை விரிவாகப் பரிசீலித்து அவர்களுக்கு அரசின் சில விதிகளை தளர்வு செய்து பல்வேறு உதவிகளை வழங்கி உத்தரவு வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் நீதிமன்றத்திலும் அவை மாவட்ட ஆட்சியரால் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
கிராம பகுதியில் குடியேற விரும்பும் வீடற்ற தொழிலாளர்களுக்கு தற்போதைய அரசு விதிமுறைகளைத் தளர்வு செய்து சிறப்பினமாகக் கருதி அவர்களின் விருப்பத்தின் பேரில் இலவச வீட்டு மனை பட்டா மற்றும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டித் தரப்படும்.
நெல்லை மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்டு தயார் நிலையில் உள்ள அம்பாசமுத்திரம் வட்டம், பாப்பாங்குளம் கிராமத்தில் 240 அடுக்குமாடி வீடுகள் மற்றும் நெல்லை மாநகரம் ரெட்டியார்பட்டி பகுதியில் பணி முடிவடையும் நிலுவையில் உள்ள அடுக்குமாடி வீடுகள் ஆகியவற்றை முன்னுரிமை அடிப்படையில் விருப்பமுள்ள ஏற்கெனவே வீடு இல்லாத மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு விலையின்றி ஒதுக்கீடு செய்யப்படும்.
பெண்களுக்கு மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் ரூ.1.50 லட்சம் வரை சிறு கடன்கள் வழங்கப்படும். பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் அவர்கள் விரும்பும் அரசு பள்ளிகளில் அவர்களை சேர்க்கவும், அரசு விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications