Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜகவுக்கு பல்லக்கு தூக்குபவர் ஓ.பி.எஸ்.! ஸ்டாலினை விமர்சித்து பிழைப்பு தேடுகிறார்! திமுக அட்டாக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜகவுக்கு பல்லக்கு தூக்குவதே அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தலையாய பணி என அமைச்சர் தங்கம் தென்னரசு சாடியிருக்கிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சித்தால் தான் ஓ.பி.எஸ்.க்கு பிழைப்பு என்ற நிலை அரசியலில் உருவாகியுள்ளதாக விமர்சித்துள்ளார்.

ஓ.பி.எஸ். குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

 வேடிக்கை

வேடிக்கை

முதலமைச்சர் ஸ்டாலின் துவங்கவிருக்கும் அனைத்து இந்திய சமூகநீதிக் கூட்டமைப்பில் சேருவதற்கு விடுத்த அழைப்பை ஏற்க மறுத்து, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் "அ.தி.மு.க.விற்கும் - சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம், எங்களை ஏன் அழைக்கிறீர்கள்" என்று சொல்ல 7 பக்க அறிக்கை அளித்திருப்பது வேடிக்கை கலந்த வினோதமாக இருக்கிறது.

ஏன் அழைத்தோம்?

ஏன் அழைத்தோம்?

மறைந்த ஜெயலலிதா அம்மையார் அவர்கள் நினைவிடத்தில் இருந்து தர்மயுத்தம் என்ற நாடகத்தை நடத்தி, பின்னர் பா.ஜ.க.வின் தயவில் பழனிசாமியுடன் இணைந்து துணை முதலமைச்சர் பதவி அனுபவித்த அவர், சமூகநீதி பற்றியெல்லாம் கவலைப்படமாட்டார் என்பது தெரிந்ததுதான் என்றாலும் - அரசியல் நாகரிகம் கருதியும் - சமூகநீதியில் தமிழ்நாட்டில் அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்பதற்காகவே அ.தி.மு.க.வையும் அழைத்தார் எங்கள் தளபதி.

கச்சத்தீவு

கச்சத்தீவு

கச்சத்தீவை தி.மு.க. தாரைவார்க்கவும் இல்லை; விட்டுக் கொடுக்கவும் இல்லை என்பதுதான் வரலாற்று உண்மை. கச்சத்தீவு கொடுக்கப்பட்டதை எதிர்த்தவர் அப்போது முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர். 29.6.1974 அன்று பிரதமருக்கே கடிதம் எழுதி கடுமையாக எதிர்த்தவர் அவர். கழக எம்.பி.க்களை நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிடச் செய்தவர் அவர் என்பதும் - ஏன், தி.மு.க. பொதுக்குழுவை கூட்டி எதிர்ப்புத் தெரிவித்து தீர்மானம் போட்டு - தமிழ்நாடு முழுவதும் கண்டனப் போராட்டங்களை அவர் நடத்திய வரலாறு எல்லாம் பாவம் திரு. பன்னீர்செல்வம் அவர்களுக்குத் தெரிந்திருக்க வழியில்லை.

ஜெயலலிதா சபதம்

ஜெயலலிதா சபதம்

15.8.91 அன்று கோட்டையில் கொடியேற்றிய அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் அவர்கள் "கச்சதீவை மீட்டே திருவேன்" என்று போட்ட சபதத்தையும் கூடவே படித்துப் பார்க்கலாம். இந்திய - இலங்கை நல்லுறவிற்காகவே கச்சத்தீவு விட்டுக் கொடுக்கப்பட்டது என்று அன்றைய பிரதமர் நரசிம்மராவ் அவர்களுக்கு முதலமைச்சராக இருந்து 30.9.1994 அன்று ஜெயலலிதா அம்மையார் அவர்கள் எழுதிய கடிதத்தைக் கூட இனியாவது படித்து பயன்பெறலாம்; உண்மையை அறிந்துகொள்ளலாம்.

எந்த திட்டம்?

எந்த திட்டம்?

தமிழ்நாட்டிற்கான திட்டங்களைத் தடுத்து விட்டதாக திரு. பன்னீர்செல்வம் கூறுகிறார். அப்படி ஒரு திட்டத்தை சுட்டிக்காட்ட முடியுமா? தென் மாவட்டங்களின் பொருளாதாரத்தையும் - அங்குள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும் கொடுக்கும் சேது சமுத்திரத் திட்டத்தை தடுத்து நிறுத்தியது யார்? உச்சநீதிமன்றத்தில் முதலமைச்சர் என்ற பொறுப்பில் இருந்துகொண்டே இந்தத் திட்டத்தை அனுமதிக்க கூடாது என்று வழக்குப் போட்டவர்தானே மறைந்த அம்மையார் ஜெயலலிதா?

பதவி சுகம்

பதவி சுகம்

தான் வாழும் தென் மாவட்டப் பகுதிக்கான இந்தத் திட்டத்தை அ.தி.மு.க. ஆட்சியே தடுத்தபோது பன்னீர்செல்வம் அவர்கள் எங்கு இருந்தார்? மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்தைப் பாழ்படுத்தியது யார்? தலைவர் கலைஞர் கட்டிய புதிய தலைமைச் செயலகத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கியது யார்? அப்படிப்பட்ட அலங்கோல - ஆணவ - தமிழக விரோத அ.தி.மு.க. அமைச்சரவையில்தான் ஓ. பன்னீர்செல்வமும் பதவி சுகம் அனுபவித்துக் கொண்டு இருந்தார். "மெட்ரோ ரயில் வேண்டாம். மோனோ ரயில் போதும்" எனப் பேசி - மெட்ரோ ரயில் திட்டத்தைத் தடுத்து நிறுத்தி விட்டு - பிறகு வேறு வழியின்றித் துவங்கியது யார் ஆட்சி? அ.தி.மு.க. ஆட்சிதானே!

கடன் தொகை

கடன் தொகை

ஓ.பன்னீர்செல்வம் நிதி அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகும் போது - தமிழ்நாட்டின் கடன் 5 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல்! அப்படி கடன் வாங்கி - ஊழல் செய்து தமிழ்நாட்டை கடனாளி மாநிலமாக்கி விட்டுப் போனவர்கள் - 10 ஆண்டு ஆட்சியில் இருந்தபோது ஒன்றிய அரசிடம் நிதி சுதந்திரத்தைப் பெற முடியாதவர்கள் இன்றைக்கு தி.மு.க. மீது பழி போட முனைவதைப் பார்த்தால், 'கூரை ஏறி கோழி பிடிக்கத் தெரியாதவர்' என்று தொடங்கும் பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.

ஊருக்கு உபதேசம்

ஊருக்கு உபதேசம்

அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பில் இணையாமல் இருப்பது அ.தி.மு.க.வின் விருப்பம். ஆனால் "நீட் தேர்வு ரத்து" போன்ற மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று எங்கள் கழகத் தலைவரைப் பார்த்துச் சொல்லும் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் மிக முக்கியமான நீட் கூட்டத்திற்கு கூட வராமல் போனது "ஊருக்கு உபதேசம்" என்ற இன்னொரு பழமொழியை நினைவுபடுத்துகிறது.

 ஏழு பக்கம் கடிதம்

ஏழு பக்கம் கடிதம்

மறைந்த அம்மையார் ஜெயலலிதாவை தலைவராக ஏற்றுக்கொண்டு இருந்த திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் பா.ஜ.க.வின் அழுத்தத்தை தாங்க முடியாமல் எப்படி திரு.பழனிசாமி அவர்களையும் முதலமைச்சராக ஏற்றுக் கொண்டு இருந்தாரோ, அதேபோல் ஒன்றிய பா.ஜ.க. அரசு நீட் விதிவிலக்கு மசோதாவை ஆளுநர் மூலம் நிராகரித்ததை திசைதிருப்ப எங்கள் கழகத் தலைவருக்கு ஏழு பக்கம் கடிதம் எழுதியிருக்கிறார் என்றே தோன்றுகிறது.

வியப்பு இல்லை

வியப்பு இல்லை

பா.ஜ.க.வின் தயவை இப்போதும் பெற எங்கள் கழகத் தலைவரை விமர்சிக்கும் கட்டாயம் திரு ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஏற்பட்டிருக்கிறது. ஏனென்றால் எங்கள் கழகத் தலைவரை விமர்சித்தால் மட்டுமே தங்களுக்குப் பிழைப்பு என்று இருப்பவர்கள் - சமூகநீதி கூட்டமைப்பில் இணைய மாட்டோம் என்பதில் வியப்பும் இல்லை; கடிதம் எழுதுவதில் புதிரும் இல்லை!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+