என் வேலையை விட்டுட்டு நிலத்தை தேடுவதா?.. அந்த துப்பறியும் பணியை நீங்களே செய்ங்க.. தங்கம் தென்னரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: என் வேலையை விட்டுவிட்டு நிலத்தை கண்டுபிடிப்பதா, அந்த துப்பறியும் பணியை எம்எல்ஏ கிரியே பார்க்கட்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

4 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று கூடியது. அப்போது கேள்வி நேரத்தின் போது எம்எல்ஏக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதில் அளித்தனர்.

அந்த வகையில் மேல் செங்கத்தில் தொழிற்பூங்கா அமைப்பதற்கான உத்தேச திட்டம் ஏதும் இருக்கிறதா என செங்கம் எம்எல்ஏ கிரி கேள்வி எழுப்பினார். இதற்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்தார்.

மேல் செங்கம்

மேல் செங்கம்

அவர் கூறுகையில் மேல் செங்கத்தில் தொழிற்பூங்கா அமைப்பதற்கான உத்தேச திட்டம் ஏதும் தற்போது அரசிடம் இல்லை என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து எம்எல்ஏ கிரி பேசுகையில், நான் கடந்த 5 ஆண்டுகளாக மேல் செங்கத்தில் உள்ள 12 ஆயிரம் ஏக்கர் கொண்ட அரசு நிலத்தை பற்றி பேசி கொண்டே இருக்கிறேன்.

தொழிற்பூங்கா அமைக்கும் திட்டம் இல்லை

தொழிற்பூங்கா அமைக்கும் திட்டம் இல்லை

ஆனால் எந்த தீர்வும் காணப்படவில்லை. இப்போதும் அந்த வினாவை எழுப்பியிருக்கிறேன். ஆனால் அமைச்சர், அங்கு தொழிற்பூங்கா அமைக்க இயலாது என சொல்லிவிட்டார். கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு அங்கே தமிழக அரசின் சார்பில் இருந்த நிலத்தை ஒன்றிய அரசு வாடகைக்கு எடுத்து அப்போது மத்திய மாநில பண்ணையாக செயல்பட்டது.

தற்காலிக பயன்பாடு

தற்காலிக பயன்பாடு

இப்போது அது வனக்கோட்டையின் சார்பில் தற்காலிக பயன்பாட்டிற்காக பயன்படுத்துவதாக கருதப்படுகிறது. ஆனாலும் நான் வருவாய் துறையிலும் கேட்டுவிட்டேன், வனத்துறையிலும் கேட்டு விட்டேன், அந்த நிலம் யாரிடத்தில் இருக்கிறது என்பது தெரியவில்லை. அதை அரசு கண்டுபிடிக்க வேண்டும்.

உரிய இடம்

உரிய இடம்

அதிலும் அது தமிழகத்திற்கு உரிய இடம். அதை கண்டுபிடித்து அந்த இடத்தில் புதிதாக ஒரு ஐடி பூங்கா அமைக்கலாம். பாண்டிச்சேரியையும் கர்நாடகாவையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள 12 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் ஐடி பூங்கா அமைத்தால் தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்கலாம். அங்கு ஐடி பூங்காவை அரசு அமைத்து தருமா என்பதை பேரவைத் தலைவர் வாயிலாக அறிய விரும்புகிறேன் என்றார்.

வேலையைவிட்டுட்டு தேடுவதா

வேலையைவிட்டுட்டு தேடுவதா


அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், தொழிற்பூங்காக்கள் அமைப்பதற்கு நிலம் தேவை. நிலம் இருக்கக் கூடிய இடங்களில் தொழிற்பூங்காக்களை அமைக்கலாம். ஆனால் உறுப்பினர் கிரி என்ன சொல்கிறார் என்றால், நிலத்தை என்னை கண்டுபிடித்துத் தர சொல்கிறார். நான் இருக்கும் வேலைகளை விட்டுவிட்டு நிலத்தை கண்டுபிடித்து , அந்த இடத்தில் தொழிற்பூங்கா அமைப்பது என்பது சிரமமான காரியம். அந்த துப்பறியும் வேலையை எம்எல்ஏ கிரி மேற்கொள்வாரேயானால் தொழிற்பூங்கா அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை அரசு பரிசீலனை செய்யும் என்றார்.

12 ஆயிரம் ஏக்கர்

12 ஆயிரம் ஏக்கர்

இதையடுத்து கிரி பேசுகையில் 12 ஆயிரம் ஏக்கர் இடமும் அரசு இடம் என்பதால்தான் அமைச்சரிடம் சொன்னேன். பின்தங்கிய மாவட்டங்கள் எல்லாம் முன்னேற வேண்டும், அங்கு தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். திருவண்ணாமலை மாவட்டம் பின் தங்கிய மாவட்டம் இங்கு வடக்கு பகுதியில் கருணாநிதியால் சிப்காட் தொழிற்பேட்டை பேஸ் 1, பேஸ் 2 அமைக்கப்பட்டது.

பரிசீலனை

பரிசீலனை

அது போல் தெற்கு பகுதியில் செங்கத்தில் உள்ள அரசு புறம்போக்கு இடங்களில் சிப்காட் பூங்காவை அரசு அமைத்து தருமா என கேள்வி எழுப்பினார். இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில் கிரி சொல்வதை போல் திருவண்ணாமலை மாவட்டம் பின்தங்கிய மாவட்டம். அங்கு தொழிற்பூங்கா அமைக்க வேண்டும் என்பது நியாயமான கோரிக்கை. அரசு நிச்சயம் பரிசீலிக்கும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+