பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை நீட்டிப்பு? இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகிறது!
சென்னை: பள்ளி மாணவர்களுக்கான காலண்டு தேர்வு வரும் 27ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து விடுமுறை அக்.7 வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான பள்ளி வேலைநாட்கள், தேர்வுகள், விடுமுறை உள்பட விவரங்கள் அடங்கிய கல்வியாண்டு நாட்காட்டி 2018-ம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் காலாண்டு தேர்வு குறித்த அட்டவணை கடந்த 9ம் தேதி வெளியானது. அதன்படி, 6 - 10 வகுப்புகளுக்கான காலண்டு தேர்வு செப்.20ம் தேதி தொடங்கி செப். 27ம் தேதி வரை நடைபெறுவதாகவும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான தேர்வுகள் 19ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து அறிவிப்பின்படி, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வு செப்.19ம் தேதி தொடங்கியது. செப்.20ம் தேதி 6-10 வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வு தொடங்கியது.
தேர்வு நேரத்தை பொறுத்தவரை, 6ம் வகுப்புகளுக்கு காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையும், 7ம் வகுப்புகளுக்கு மதியம் 1.15 மணி முதல் 3.15 வரைம், 8ம் வகுப்புகளுக்கு 9.30 முதல் 12 மணி வரையும், 9ம் வகுப்புகளுக்கு 1.15 முதல் 4.30 மணி வரையும், 10ம் வகுப்புகளுக்கு காலை 9.30 மணி முதல் 12.45 வரையும் தேர்வு நடைபெறும். இதையடுத்து செப். 28 முதல்அக். 2 வரை பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை வழங்கப்பட உள்ளது.
ஆனால் விடுமுறை வெறும் 5 நாட்கள் மட்டுமே வருவதால், இதனை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. இது குறித்து திருச்சியில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், "பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறையை நீட்டிக்க வேண்டுமென கோரிக்கை வந்துள்ளது; இது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும்" என்று கூறியுள்ளார்.
அமைச்சரின் அறிவிப்பையடுத்து, அக்.7 வரை விடுமுறை நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications