“கண்ட கேள்விக்கு எல்லாம்..” தவெக விஜய் பேச்சு குறித்த கேள்விக்கு அமைச்சர் டிஆர்பி ராஜா ரியாக்ஷன்!
சென்னை: தவெக தலைவர் விஜய் பேச்சு பற்றிய கேள்விக்கு அமைச்சர் டிஆர்பி ராஜா கொடுத்த ரியாக்ஷன் பத்திரிகையாளர் சந்திப்பில் சலசலப்பை ஏற்படுத்தியது. "சும்மா கண்ட கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. ஆரோக்கியமான கேள்வி கேளுங்கள்." என அமைச்சர் டிஆர்பி ராஜா கூறியுள்ளார்.
இதற்கிடையே, இன்று டிஆர்பி ராஜாவின் சொந்த மாவட்டமான திருவாரூரில் பிரச்சாரம் செய்த விஜய், "இந்த மாவட்டத்தில் ஒரு அமைச்சர் இருக்கிறார். அவருடைய வேலை முதலமைச்சர் குடும்பத்திற்கு மட்டும் சேவை செய்வதே" என விமர்சித்துள்ளார்.

விஜய் காட்டமாக விமர்சனம்
நடிகரும் தவெக தலைவருமான விஜய், நேற்று நாகப்பட்டினத்தில் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தார். அப்போது ஆளும் திமுக அரசை கடுமையாகத் தாக்கி பேசினார். விஜய் பேசும்போது "சிஎம் சார் மனசை தொட்டு சொல்லுங்க.. வெளிநாட்டு முதலீடா இல்லை வெளிநாட்டில் முதலீடா.. " என்று கேள்வி எழுப்பினார். மேலும், குடும்பத்தை வைத்து கொள்ளையடிக்கும் உங்களுக்கே இவ்வளவு என்றால் சொந்தமாக உழைத்து சம்பாதித்த எனக்கு எவ்வளவு இருக்கும்? எனப் பேசினார் விஜய்.
டிஆர்பி ராஜா ரியாக்ஷன்
இந்த நிலையில், வெளிநாட்டு முதலீடா இல்லை வெளிநாட்டில் முதலீடா என தவெக தலைவர் விஜய், முதலமைச்சர் ஸ்டாலினை விமர்சனம் செய்தது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பின் போது தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த டி.ஆர்.பி. ராஜா, "சும்மா கண்ட கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. ஆரோக்கியமான கேள்வி கேளுங்கள். பதில் சொல்கிறேன்" எனக் கூறினார்.
இதற்கிடையே, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தனது தேர்தல் சுற்றுப்பயணத்தின் போது, செப்டம்பர் 20 ஆம் தேதி மாலை திருவாரூரில் பிரச்சாரம் செய்தார். அப்போது, உள்ளூர் பிரச்சனைகள் குறித்தும் பேசினார் விஜய்.
அமைச்சரை விமர்சித்த விஜய்
விஜய் பேசுகையில், "திருவாரூர் மாவட்டம் உங்கள் சொந்த மாவட்டம் என்று சொல்கிறீர்கள். ஆனால் இங்கு திருவாரூர் கருவாடாய் காய்கிறது. இதை சிஎம் கண்டுகொள்வதே இல்லை" என்று விமர்சித்தார். பொதுமக்கள் அடிப்படை சாலை வசதிகளுக்காகவும், கல்வி மற்றும் மருத்துவ வசதிகளுக்காகவும் சிரமப்படுவதாக விமர்சித்தார்.
மேலும் திமுக அமைச்சர் டிஆர்பி ராஜாவையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார் விஜய்.. திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் டிஆர்பி ராஜாவின் வேலை என்ன என்று விஜய் விமர்சித்துள்ளார். திருவாரூரில் விஜய் பேசுகையில், "இந்த மாவட்டத்தில் ஒரு அமைச்சர் உள்ளார். அவரது வேலை என்ன தெரியுமா? சிஎம் ஸ்டாலின் குடும்பத்திற்கு சேவை செய்வது தான் அவரது வேலை." எனக் காட்டமாக விமர்சித்தார்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications