ஸ்டாலினை டிடிவி தினகரன் விமர்சனம் செய்யாதது ஏன்? அமைச்சர் உதயகுமாருக்கு வந்த சந்தேகம்
Recommended Video

சென்னை: தினகரன் நிழல் யுத்தத்தை நடத்தி வருகிறார். ஸ்டாலின் தினகரன் இடையேயான உறவு காலத்தினால் கட்டவிழ்க்கப்படும் என்று வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.
பேரிடர் காலங்களில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேம்படுத்த, பேரிடர் உதவிப்படை என்ற அமைப்பினை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் இன்று கலைவாணர் அரங்கத்தில் துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மீட்பு பணிகள் குறித்த 4 ஆய்வுக் கூட்டங்கள் கடந்த ஒருமாத காலமாக நடத்தப்பட்டு வருகிறது என்றும், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளது என்றும் கூறினார்.
[ லேட்டா வந்தாலும் வெற்றிதான் முக்கியம்.. ரஜினி பரபரப்பு பேச்சு ]
மேலும் அவர் கூறியதாவது: முதல் நிலை மீட்பாளர்கள் எப்பொழுதுமே தயாராக உள்ளனர். அவர்களுடன் தீயணைப்பு துறை உள்ளிட்ட சிறப்பு படைகள் உள்ளது. மாவட்ட நிர்வாகம் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது என்றும், எதிர் கட்சியினர் விளம்பரத்திற்காக பொய் குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர்.
மழை காலங்களில் மக்கள் எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். மழைக்காலங்களில் எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஒரு மாவட்டத்திற்கு 4 மணி நேரம் செலவிட்டு அனைத்து ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் ஸ்டாலின் மீது கண்டன அறிக்கையோ விமர்சனமோ செய்யாதது ஏன்? ஸ்டாலினை பார்த்து தினகரன் பயப்படுகிறாரா?.
தினகரன் சுயநலத்திற்காக பலரது எம்.எல்.ஏ. பதவியை இழக்க வைத்துள்ளார். ஜெயலலிதாவின் மறைவிற்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் திமுக. இவர்களுடன் தினகரன் வைத்துள்ள உறவு கூட்டணிக்கான முயற்சியா? தினகரன்-ஸ்டாலின் உறவு காலத்தினால் கட்டவிழ்க்கப்படும்.
மதுரையில் தேவர் ஜெயந்தி அன்று தேவர் மற்றும் ஜெயலலிதாவின் பேனர்களை கிழித்துள்ளனர். இதற்கான வீடியோ ஆதாரங்கள் உள்ளது. ஜெயலலிதா இல்லாத காரணத்தினால் தைரியமாக இது போன்ற செயலில் தினகரன் ஈடுபடுகிறார். நிழல் யுத்தத்தை தினகரன் நடத்தி வருகிறார், வன்முறையை அ.தி.மு.க என்றும் விரும்பாது.
-
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications