லேட்டா வந்தாலும் வெற்றிதான் முக்கியம்.. ரஜினி பரபரப்பு பேச்சு
Recommended Video

சென்னை : லேட்டா வந்தாலும் ஹிட் தான் முக்கியம் என்று 2.0 ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் 2.0 ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்தப் படத்தின் கதாநாயகன் ரஜினிகாந்த், கதாநாயகி எமி ஜாக்சன், அக்ஷய்குமார், இயக்குனர் ஷங்கர், தயாரிப்பாளர்கள், படக்குழுவினர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
ட்ரெய்லர் வெளியீட்டிற்குப் பின்னர் விழா மேடையில் பேசிய ரஜினிகாந்த் கூறியதாவது : 2.0 படத்தின் அனைத்து பெருமைகளும் இயக்குனர் சங்கரையே சேரும். 2.0 படம் மூலம் உலகிற்கே ஒரு நல்ல தகவலை கூறியுள்ளோம். சங்கரின் படைப்புத்திறனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
600 கோடி செலவில் 2.0 படம் தயாராகியுள்ளது. நிச்சயமாக இந்தப் படம் மக்களுக்கு நல்லதொரு தகவலை கொடுக்கும்.
[செல்போன் வச்சிருக்கும் ஒவ்வொருத்தனும் கொலைகாரனுங்க: மிரட்டும் 2.0 ட்ரெய்லர் ]

விலக முடிவு
காலா படப்பிடிப்பிற்குப் பிறகு 2.0 படப்பிடிப்பில் பங்கேற்க முடியாத வகையில் உடல்நிலையில் சோர்வு ஏற்பட்டது. படத்தில் இருந்து பாதியிலேயே விலக முடிவு செய்து ஷங்கரிடம் என்னால் இந்த படத்தை முடித்துக் கொடுக்க முடியாது இந்தப் படத்தில் நடிப்பதற்காக வாங்கிய பணம் அனைத்தையும் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன் என்று கூறினேன்.

தெம்பு கொடுத்த ஷங்கர்
ஆனால் ஷங்கர் நான் இல்லாமல் இந்தப் படத்தை எடுக்க முடியாது என்று கூறினார். உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன் 4 மாதங்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

நல்ல நண்பர்கள் கிடைத்துள்ளனர்
தயாரிப்பாளர், இயக்குனர் உள்ளிட்டோர் வந்து என்னை சந்தித்தனர். தயாரிப்பாளர் 4 மாதம் என்ன 4 ஆண்டுகள் ஆனாலும் அவகாசம் எடுத்துக் கொள்ளுங்கள் நாங்கள் காத்திருக்கிறோம் என்று கூறினார். இவர்களைப் போன்ற நண்பர்கள் கிடைக்க நான் மிகவும் பாக்கியம் செய்திருக்கிறேன். எனக்கு கிடைத்த நண்பர்கள் அனைவரும் கோகினூர் வைரங்கள்.

ஹிட் அடிக்கணும்
லேட்டாக வந்தாலும் ஹிட் அடிப்பது தான் முக்கியம். தற்போது வந்தாச்சு வெற்றியும் உறுதியாயிடுச்சு இனிமே ஹிட் அடிக்க வேண்டியது மட்டும் தான் பாக்கி என்று பேசியுள்ளார். ரஜினியின் இந்த வார்த்தையை கேட்டு கூட்டத்தில் இருந்தவர்கள் குஷியாக நான் படத்தை சொன்னேன் என்று ட்விஸ்ட்டு வைத்துவிட்டார்.
ரஜினி திரைப்படத்தை சொல்கிறாரா அல்லது தனது அரசியல் வருகையை பற்றி மறைமுகமாக சொல்கிறாரா என்பது அவருக்கே வெளிச்சம்.
-
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications