25.5 லட்சம் சம்பளம்! தட்டித்தூக்கிய நான் முதல்வன்மாணவர்கள்! பணி ஆணை தந்த உதயநிதி..

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த திராவிட மாடல்ஆட்சியில் தனித்துவமான திட்டம் நான் முதல்வன்'. இதன் மூலம் 13 லட்சம் பேர் பலனடைந்துள்ளனர்.

இத்திட்டம் கடந்த வருடம் 01.03.2022 அன்று தொடங்கப்பட்டது. ஏறக்குறைய 19 மாதங்களில் 13 லட்சம் பேருக்குப் பயிற்சி என்பது இமாலய சாதனை!

Minister Udhayanidhi give job offer letters to 1200 students trained under Naan Mudhalvan scheme

இந்த 'நான் முதல்வன்' மூலம் கீழ் பயிற்சிபெற்ற 1,200 மாணவர்களுக்குப் பணி நியமன ஆணைகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி இருக்கிறார். இதற்கான விழா கடந்த 6ஆம் தேதி நடைபெற்றது.

அதில் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் கற்பதற்கான செயலியை அறிமுகப்படுத்தி வைத்த உதயநிதி, மென்பொருள் துறை திறமையாளர்களை அடையாளம் காணும் வகையில் Tamil nadu Coders Premier league ஐ தொடங்கியும் வைத்தார்.

விழாவில் பேசிய அவர், "ஓர் ஆண்டில் 10 லட்சம் பேருக்குப் பயிற்சி அளிக்க வேண்டும் என்று இலக்கு வைத்தோம். ஆனால், இன்று அந்த இலக்கைக் கடந்து 13 லட்சம் பேருக்கு இத்திட்டத்தின் பலன் சென்றடைந்துள்ளதுஎன்ற ஒரு சிறப்பான செய்தியைச் சொன்னார்.

Minister Udhayanidhi give job offer letters to 1200 students trained under Naan Mudhalvan scheme

இந்த நான் முதல்வன்மூலம் பலனடைந்த மாணவர்கள் என்ன சொல்கிறார்கள்? கலைஞர் செய்தியில் இதற்கான ஒரு சந்திப்பு நடத்தப்பட்டது. அதில் பங்கேற்ற மாணவர்கள் பல தகவல்களைத் தட்டி விட்டனர்.

இப்படி எல்லாம் ஒரு படிப்பு இருக்கிறதா? அதைத் தமிழ்நாடு அரசு இலவசமாகக் காற்று தருகிறதா என நம்மை வாய் பிளக்க வைத்தது இந்த மாணவர்களின் பேச்சு.

"என் பெயர் க்ரீஷ். நான் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் தகவல் தொழில்நுட்பம் பற்றிப் படித்து வருகிறேன். கடந்த மூன்று semester ஆக 'நான் முதல்வன்' பாடத்திட்டங்களைப் படித்து வருகிறேன். ஒவ்வொரு பாடப் பிரிவுமே வித்தியாசமாக இருக்கின்றது. அதேசமயம் அறிவுப்பூர்வமாகவும் இருக்கிறது. நிறையத் தகவல்களைத் தரும் பாடமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

Minister Udhayanidhi give job offer letters to 1200 students trained under Naan Mudhalvan scheme

நான் இப்போது ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளேன். அதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. வருடத்திற்கு 25.5 லட்சம் சம்பளம் என்கிறார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கையால் பணி ஆணை பெற்றவர்களில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களும் இருந்தனர் என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய செய்தி. இவர்களுக்கு சதர்லேண்ட்டில் பணி வழங்கப்பட்டுள்ளது.

'நான் மட்டும் முதல்வன் அல்ல; இங்குள்ள ஒவ்வொருவரையும் முதல்வனாக்கிப் பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இத்திட்டம் தொடங்கப்படுகிறது' என்று விழா மேடையில் குறிப்பிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்.

Minister Udhayanidhi give job offer letters to 1200 students trained under Naan Mudhalvan scheme

"நான் ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்ப வகுப்பில் சேர்ந்து படிக்கத் தனியார் பயிற்சிக் கூடத்திற்குச் சென்றேன். அங்கே 30 ஆயிரம் கேட்டார்கள். அவ்வளவு பெரிய தொகையை என்னால் கொடுக்க முடியவில்லை.

அந்தநேரத்தில்தான் நான் முதல்வன்திட்டத்தை அரசு அறிமுகம் செய்தது. உடனே இந்த வகுப்பில் போய்ச் சேர்ந்தேன். எனக்கு இதன் மூலம் 30 ஆயிரம் லாபம். நான் செலவு செய்யாமல் அந்தப் பாடத்தைப் படித்தேன்.

நான் தனியார் பயிற்சி பள்ளியில் பார்த்த பாடத்திட்டத்தைவிட அரசு வழங்கி உள்ள பாடத்திட்டம் சிறப்பாக இருப்பதைப் படிக்கும் போதே உணர்ந்தேன்" என்கிறார் ஒரு மாணவர்.

"நான் சாதாரண கிராமத்துப் பின்னணியிலிருந்து வந்த பெண்தான். எனக்கு மென்பொருள் துறை பற்றி அதிகம் தெரியாது. என் கிராம சூழல் அந்தளவுக்கு இல்லை.

Minister Udhayanidhi give job offer letters to 1200 students trained under Naan Mudhalvan scheme

நான் அதற்காகச் சென்னை போன்ற ஒரு நகரத்திற்கு வந்துதான் படிக்கின்றேன். 3d experience catia பற்றிப் படித்து வருகிறேன். இதற்காக 'நான் முதல்வன்' திட்டத்தில் சேர்ந்தேன். ஒரு வாரம் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்றேன். ஒருவாரம் ஆஃப் லைன் வகுப்பிலும் பங்கேற்றேன்.

நான் தமிழ் வழிக்கல்வியில் படித்தவள். எனக்கு கம்யூனிகேஷன் ஸ்கில் என்பது மிகமிக குறைவு. ஆங்கிலம் தெரியாததால், பெரிய அளவில் தன்னம்பிக்கை இல்லை. ஆரம்பத்தில் பயம்தான் அதிகம் இருந்தது.

இந்த வகுப்பில் சேர்ந்து, அரசாங்கம் தரும் பயிற்சிகளை எடுத்துக்கொண்டபிறகு, எனக்குள் மிகப் பெரிய மாற்றத்தை உணர்கிறேன். எனக்கு நம்பிக்கை கிடைத்திருக்கிறதுஎன்கிறார் மற்றொரு கிராமப்புற மாணவி.

Minister Udhayanidhi give job offer letters to 1200 students trained under Naan Mudhalvan scheme

"என்னைப் பொறுத்தவரை நான் முதல்வன்திட்டத்தில் கற்றுத்தரப்படும் பாடம் தரமாக உள்ளது. தனியாரைவிடத் தரமானது என்று என்னால் தைரியமாகச் சொல்ல முடியும். முதலில் பாடத்தைச் சொல்லிக் கொடுத்துவிட்டு, பின்னர் அதை அப்படியே செயல்முறையும் செய்துகாட்டச் சொல்கிறார்கள்.

அதனால், பாடம் என்பது பயிற்சியாக மாறி, புரிதலை மேலும் வலுவாக்குகிறது" என்று தடதடவென்று தரமான ஆங்கிலத்தில் பிளந்து கட்டுகிறார் நகர்ப்புறத்திலிருந்து இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்ற மாணவர் ஒருவர்.

"நான் முதல்வன் திட்டம் என்பது பயிற்சி மட்டும் அல்ல; இது எங்கள் கல்லூரியில் மதிப்பெண் கணக்கிலும் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

Minister Udhayanidhi give job offer letters to 1200 students trained under Naan Mudhalvan scheme

சரியாக நாங்கள் இதற்கான தேர்வுகளைச் செய்யும் போது கல்லூரி நிர்வாகம் எங்களுக்கு சில கிரெடிட்ஸ்கொடுக்கிறார்கள். அது மதிப்பெண்ணாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதால், இதனை ஆர்வமாக மாணவர்கள் கற்கிறார்கள்.

சில வகுப்புக்களைப் புறக்கணிக்காமல் தொடர்ந்து வருகிறார்கள். ஆகவே, இத்திட்டம் தமிழக கல்வியை அடுத்த படிக்கு அழைத்துக்கொண்டு சென்றுள்ளது" என்கிறார் 2 ஆண்டு கல்லூரி படிக்கும் இளம் மாணவர் ஒருவர்.

தொடர்ந்து பேசிய அவர், "நான் படித்து முடிக்கும் போது கேம்பஸ் இண்டர்வியூஸ் நடக்கும். அப்போது முதல் படியாக Aptitude எப்படி என்பதைத்தான் சோதிப்பார்கள்.

Minister Udhayanidhi give job offer letters to 1200 students trained under Naan Mudhalvan scheme

அடுத்து Group discussion. இந்த இரண்டையும் பற்றி நான் 2 ஆண்டு கல்லூரி படிக்கும்போதே கற்றுக்கொள்கிறேன். அது எவ்வளவு பெரிய உதவி?" என்றும் சொல்கிறார்.

"நான் Electric Vehicle Design Course படித்தேன். அடுத்து Advanced EV படித்தேன். இவை இரண்டு முடித்த பிறகு industry 4.0. இதற்கு எல்லாம் உறுதுணையாக நான் முதல்வன்' இருந்தது.

Minister Udhayanidhi give job offer letters to 1200 students trained under Naan Mudhalvan scheme

ஒரு நிறுவனத்திற்கு நான் வேலைக்காகப் போகும்போது மற்ற மாணவர்களைவிட எனது பயோவில் கூடுதலாகச் சிலவற்றை கற்றிருக்கிறேன் என்பதால் என்னை வேலைக்கு எடுத்தார்கள். அதை எனது நேர்காணல் போதே என்னால் உணரமுடிந்ததுஎன்கிறார் தற்போது தனியார் நிறுவனம் ஒன்றில் பணியில் அமர்ந்துள்ள பெண் ஒருவர்.

"எனக்கு நான் முதல்வன்திட்டம் மூலம் கிடைத்த கோர்ஸ் ஏஆர் விஆர். அதாவது Virtual reality (VR) and augmented reality (AR). பலரும் ஹாலிவுட் படங்களை எல்லாம் பார்க்கிறோம். அதில் பயன்படுத்தப்படும் எஃபெக்ட்ஸ் எல்லாம் இந்த தொழில்நுட்பங்களை வைத்துத்தான் செய்கிறார்கள்.

Minister Udhayanidhi give job offer letters to 1200 students trained under Naan Mudhalvan scheme

இந்தப் படிப்பைப் படிக்கப் பலருக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. நமது பொறியியல் படிப்புகளில் இதற்கான வாய்ப்புகள் குறைவு. அந்த மாதிரியான சூழலில் 'நான் முதல்வன்திட்டத்தில் ஏஆர் விஆர் பாடத்தை வைத்தது என்பது சிறப்பான செயல்.

அதைக் கேட்கும்போது அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. உடனே அதில் சேர்ந்து படித்தேன். ஒருபைசா செலவில்லாமல் நான் அவற்றைக் கற்று வருகிறேன்" என்கிறார் ஹாலிவுட் ஆர்வலரான இந்த மாணவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+