விஜய் ஆண்டனி வீட்டுக்கு போன உதயநிதி ஸ்டாலின் கண்ட காட்சி.. எடுத்த அதிரடி நடவடிக்கை
சென்னை: இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகளின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த போது அங்கு மழை நீர் தேங்கிக் கொண்டிருந்ததை அடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவின் பேரில் மணல் கொட்டி அந்த சாலை சரி செய்யப்பட்டது.
நடிகர் விஜய் ஆண்டனி தனது குடும்பத்தினருடன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள டிடிகே சாலையில் வசித்து வருகிறார். இவருடைய மனைவி பாத்திமா, இருவரும் காதலித்து கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள்.

இவர்களுக்கு மீரா, லாரா என்ற இரு மகள்கள் உள்ளனர். இதில் மீரா சர்ச் பார்க் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் சற்று மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. நேற்று இரவு தனது தந்தை அறையில் மீரா உறங்கச் சென்றுள்ளார். இந்த நிலையில் அதிகாலை 3 மணி அளவில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
இதையடுத்து அவர் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மீரா ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அவருடைய உடலுக்கு திரை பிரபலங்கள், மாணவிகள், பள்ளி முதல்வர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்கள். அந்த வகையில் மீராவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்திருந்தார். அப்போது நேற்று பெய்த மழையால் விஜய் ஆண்டனி வசிக்கும் சாலையில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக இருந்தது.
இதையடுத்து மீராவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு விஜய் ஆண்டனிக்கும் அவருடைய மனைவி பாத்திமாவுக்கும் ஆறுதல் கூறிவிட்டு வெளியே வந்தார். பின்னர் மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்ட உதயநிதி, விஜய் ஆண்டனி வீட்டின் சாலையில் இருக்கும் மழை நீரை உடனே அகற்ற உத்தரவிட்டார்.

மேலும் அங்கு சேறும் சகதியுமாக இருப்பதால் அந்த இடத்தில் மணலை கொட்டி நிரவிவிடுமாறும் உத்தரவிட்டார். இதையடுத்து உடனடியாக லாரியில் ஜல்லிக்கற்களும் மணலும் கொண்டு வரப்பட்டது . பின்னர் ராட்சத குழாய்கள் மூலம் நீர் வடிய வைக்கப்பட்டது. இதையடுத்து ஜல்லிக்கற்களையும் மணலையும் கொட்டி அந்த இடத்தை நிரவிவிட்டனர்.












Click it and Unblock the Notifications